/indian-express-tamil/media/media_files/2025/01/29/sg5oaIrPpy5CkuremvGu.jpg)
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில், ரோஹினி விஜயாவிடம் மாட்டிக்கொண்டார்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், முத்துவும் மீனாவும் மண்டபத்தில் அமர்ந்திருக்க, பரசு பிரவுண் மணியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது பிரவுன் மணி, கல்யாணத்தில் ஒரே ஒரு குறை தான். உங்கள் நண்பர் குடும்பத்தை எனக்கு அறிமுகம் செய்யவே இல்லையே என்று கேட்க, பரசு திருடர்கள் நகை திருடிச்சென்றதையும், அதை மீனா முத்து இருவரும் திருப்பி வாங்கி கொடுத்த சம்பவத்தை சொல்கிறார்.
இதை கேட்ட பிரவுன் மணி, அவர்களை பாராட்டியே ஆக வேண்டும் என்று கூறி, கையில் மாலையுடன் வர, மீனாவும் முத்தும் அவரை பார்த்து அதிர்ச்சியாக, இவரும் அவர்களை பார்த்து அதிர்ச்சியாகிறார். அதன்பிறகு, இவர் எவ்வளவு பெரிய வேலை செய்திருக்கிறார். இவருக்கு தான் பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும் என்று கூறி முத்து, மாலையை பிரவுன் மணி கழுத்திலேயே போடுகிறான். இதை பார்த்து அமைதியாக இருக்கும் பிரவுன் மணியை முத்து தனியாக அழைத்து சென்று பேசுகிறார்.
இந்த பக்கம் விஜயா, ஸ்ருதி மற்றும் ரோஹினியை பற்றி உயர்வாக பேசிவிட்டு மீனாவை மட்டம் தட்ட, அப்போது மீனாவும் முத்துவும் என்ட்ரி கொடுக்கின்றனர். அவர்களிடம் வேலை முடிந்ததா என்று அண்ணாமலை கேட்க, பரசு மாமா சடங்கு செய்ய கூப்பிட்டார் என்று சொல்கிறார் முத்து. அதை கேட்ட அண்ணாமலை போய் செய்துவிட்டு வர வேண்டியதானே என்று கேட்க, அதற்குள் நம்ம வீட்டில் ஒரு சடங்கு இருக்குபா அதுதான் செய்ய வந்தேன் என்று சொல்கிறான். அதன்பிற ரவி ஸ்ருதியை கேட்க அவங்க ஹனிமூன் போயிருப்பதாக அண்ணாமலை சொல்கிறார்.
அதன்பிறகு மனோஜ் இருக்கிறானா என்று கேட்க, அண்ணாமலை இருக்கிறான் என்று சொல்ல, முத்து நரி வேஷம் போட்ட கதையை சொல்கிறார். இதை கேட்ட ரோஹினி இப்போ எதுக்கு இவர் சம்பந்தமே இல்லாம ஒரு கதையை சொல்கிறார் என்று கேட்க, சம்பந்தம் இருக்கு பார்லர் அம்மா என்று சொல்லிவிட்டு மாமா மாமா என்று கூறிப்பிட, பிரவுன்மணி உள்ளே வருகிறார். இவரை பார்த்து விஜயா, ரோஹினி அப்பா இறந்துவிட்டார் சொத்து எப்படி இருக்கு கேஸ் முடிஞ்சுதா? ரோஹினிக்கு சொத்து கிடைக்கும்ல என்று கேட்கிறார்.
இந்த பக்கம், மனோஜ் பிஸினஸ் பண்ண பணம் கேட்டேனே எடுத்து வந்தீங்களா என்று கேட்க, பிரவுன் மணி அமைதியாக இருக்கி, ரோஹினி அதிர்ச்சியில் இருக்கிறார். இவர் அங்கிள் அங்கிள் என்று கூப்பிட்டால அது இவங்க அங்கிள் இல்ல, பரசு மாமா அவங்க மாப்பிள்ளையோட மாமாதான் இவர் என்று சொல்ல, அப்போ ரோஹினியின் சொந்தக்காரங்கதான் பரசு வீட்டு பொண்ண கட்டிருக்காங்களா என்று கேட்கிறார் அண்ணாமலை.
பரசு மாமா நம்மகிட்ட அறிமுகப்படுத்துவதாக சொன்ன தாய் மாமாவே இவர் தான். அதனால் தான் இவரை இங்கு கூட்டிக்கிட்டு வந்தேன் என்று முத்து சொல்ல, இவங்க பெரிய பணக்காரங்க, அப்புறம் எப்படி பரசு மாமா குடும்பம் சொந்தமாக முடியும் என்று கேட்ககிறான் மனோஜ். இதை பார்த்து அதிர்ச்சியாகும் ரோஹினி பிரவுன் மணியை ஹோட்டலில் தங்கியிருக்கீங்களா? வாங்க வெளியில் போய் தனியா பேசலாம் என்று சொல்லி அழைக்க, இங்கே நிறைய விஷயம் பேசனும் என்று முத்து விடாமல் பிடிக்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.