ரோஹினி வார்த்தையால் அசிங்கப்பட்ட முத்து: போலீஸை முறைத்த மீனா: அடுத்து என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோஹினிக்கு சப்போர்ட் செய்ய போய் முத்துவும் மீனாவும் அசிங்கப்பட்டனர்.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோஹினிக்கு சப்போர்ட் செய்ய போய் முத்துவும் மீனாவும் அசிங்கப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
siragadikka aasai March 29.jpg

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்த்து என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டில், ரவி, முத்து இருவரும், மனோஜ்ஜிடம் நீ ரோஹினிக்கு சப்போர்ட் செய் என்று சொல்ல, இந்த வீட்டில் அம்மா மட்டும் தான் என் மேல் பாசமாக இருக்காங்க அதையும் கெடுக்க பார்க்கிறீங்களா என்று மனோஜ் கேட்க, முத்து அவனை அடிக்க போகிறான். ஸ்ருதி, மீனா இருவருமே கடுப்பாகின்றனர். இதன் பிறகு, மீனா நானும் ஏ.டி.எம்.கார்டை உங்களிடம் கொடுத்துவிடவா என்று முத்துவிடம் கேட்கிறாள்.

இதை கேட்ட முத்து இப்போ வேண்டாம் நான் கேட்கும்போது கொடு என்று சொல்லிவிட்டு, கீழே வந்து, மீனாவிடம் ஏ.டி.எம்.கார்டு கேட்க, அவள் எதற்கு என்று கேட்கிறாள். நீ கொடு மீனா என்று முத்து கேட்க, மீனா ஏ.டி.எம்.கார்டுடன் வருகிறாள். இதை என்னிடம் வேண்டாம் அம்மாவிடம் கொடு என்று என்று சொல்ல, அண்ணாமலை எதற்காக அவளிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்க, அம்மாதான் இந்த வீட்டில் நிதியமைச்சர் அதனால் அவரிடம் தான் கொடுக்க வேண்டம் என்கிறான்.

அதன்பிறகு, ரோஹினி இந்த வீட்டில் சமையலுக்கு பணம் கொடுக்கிறார். ஆனால் அவரது ஏ.டி.எம்.கார்டை அத்தை வாங்கிக்கொண்டார். இது தப்பு இல்லையா என்று கேட்க, இப்போ அம்மா செய்த்தில் என்ன தப்பு என்று மனோஜ் கேட்க, ஆண்டி செயத்தில் எந்த தப்பும் இல்லை. சின்ன விஷயத்தை பெருசாக்கி, சிலர் குளிர் காய பார்க்கிறார்கள் என்று ரோஹினி சொல்ல, இப்போ எல்லோருக்கும் புரிஞ்சுதா? அவ்வளவு தான் பஞ்சாயத்து முடிந்த்து என்று விஜயா சொல்கிறார்.

Advertisment
Advertisements

ரோஹினிக்கு சப்போர்ட் செய்ய போய் அசிங்கப்பட்ட முத்து, இவங்களுக்கு சப்போர்ட் செய்ய வந்தேன் பாரு என்னை சொல்னும், மீனா என் முகத்தில் காரி துப்பு, பலகுரல் நீ இங்கிலீஷில் என்னை திட்டு, பார்லர் அம்மா உங்களுக்கு பெரிய கும்பிடு என்று சொல்ல, ரோஹினி உள்ளே சென்றுவிடுகிறாள். அடுத்து அருண் டிராபிக்கில் நிற்க, முருகன் தனக்கு லவ் செட் ஆகிவிட்டது என்று சொல்கிறான். ஆனால் ஹெல்மட் இல்லாமல் வந்த்தால், அவனுக்கு அருண் பைன்போட, அவன் கட்டிவிட்டு கிளம்புகிறான்

அதன்பிறகு, மீனா, 3 பேருடன் பைக்கில் வர, அவருக்கும் அருண் பைன் போடுகிறான். அப்போது முத்து பற்றி அருண் தப்பாக பேச, அவனை திட்டிவிட்டு பைன் கட்டிவிட்டு மீனா சென்றுவிடுகிறான். அடுத்து சீதா வர, அவ ட்ராப் செய்வதாக அருண் சொல்ல, அவள் வேண்டாம் என்று சொல்கிறாள். அத்துடன் எபிசோடு முடிகிறது. 

Tamil Cinema News tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: