/indian-express-tamil/media/media_files/2025/04/28/ctMomNqLlsAAkhOrVa67.jpg)
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் பணத்தை சிந்தாமணியின் வீட்டில் இருந்து எடுப்பதற்காக முத்து பெரிய பிளான் போட்டு அதை செயல்படுத்த, சிந்தாமணி திடீரென வீட்டுக்கு வருகிறார். இதனால் அடுத்து என்ன நடந்துது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,
இன்றைய எபிசோட்டிர் தொடக்கத்தில், சிந்தாமணி வீட்டிற்கு போய் இன்கம் டேக்ஸ் ஆபிஸராக நடித்து பணத்தை எடுத்துட்டு வரணும் என்று முத்து சொல்ல, ரவி பயப்படுகிறன். ஆனால், ஸ்ருதி நான் நிறைய டப்பிங் பேசியிருக்கிறேன் அதனால எந்த இடத்தில் என்ன பண்ணனும்னு எனக்கு கண்டிப்பா தெரியும் நான் பண்றேன் என்று தைரியமாக சொல்ல, வேறு வழியில்லாமல் ரவியும் ஒத்துக்கொள்கிறார்.
பிறகு மறுநாள் காலையில் 4 பேரும் இன்கம் டேக்ஸ் ஆபிஸர்ஸ் போல சிந்தாமணி வீட்டிற்கு முன்பு கத்திருக்க, சிந்தாமணி மண்டபத்தில் இருந்து பணம் கொண்டு வருவாங்க வாங்கி வைங்க என்று தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வருகிறார் இதை மறைந்து இருந்து கவனித்த முத்து, சிந்தாமணி காரில் ஏறி செஞ்சதும் ரவி ஸ்ருதி மற்றும் செல்வத்துடன் வீட்டிற்குள் போகிறார்கள்.
வீட்டிற்குள் இவர்களை பார்த்ததும் யாருன்னு தெரியாமல் எல்லோரும் முழித்துக் கொண்டு இருக்க, ஒருவர் காசு கொடுக்க வருவாங்கன்னு சொன்னாங்களே அவர்களா இருக்கும் சொல்கிறார், அதற்கு ஸ்ருதி ஹிந்தியில் பேச அதை அறிந்திருப்பவர்கள் புரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ருதி இந்தியில் பேசியதை ரவி இங்கிலீஷில் சொல்ல, முத்து தமிழில் நாங்கள் இன்கம் டேக்ஸ் ஆபிசர் என்று சொல்கிறான்.
இதை கேட்ட வேலையாட்கள், அப்படினா என்ன என்று கேட்கிறார்கள். நாங்க வருமானவரித்துறையில் இருந்து வருகிறோம், சிந்தாமணி அரசாங்கத்துக்கு கணக்குல காட்டாத பணத்தை சேர்த்து வச்சிருக்காங்கன்னு எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது, நாங்க சோதனை பண்ண போறோம் என்று சொன்னதும் அங்கு இருப்பவர்கள் எங்க அம்மாவுக்கு போன் பண்ணுவேன் என்று சொன்னதும் ஸ்ருதி அங்கு இருப்பவர்கள் போனை வாங்கி வைத்துக் கொள்கிறாள்.
இதனால் அங்கிருப்பவர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அப்போது முத்து, ஸ்ருதி, ரவி, செல்வம் என நான்கு பேரும் பணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் பார்வதி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த சிந்தாமணிக்கு வயிறு சரியில்லாத காரணத்தினால், காரை மீண்டும் வீட்டுக்கு திருப்பி கொண்டுவர, அந்த நேரத்தில் முத்துவின் கையில் பணம் கிடைத்துவிடுகிறது. இதை பார்த்த முத்து இது மீனா பணம் என்பதை புரிந்துகொள்கிறான்.
உடனே டேய் ரவி, ஸ்ருதி செல்வம் ஆகியோரிடம், பணத்தை எடுத்தாச்சு என்று சொன்னதும் வாங்க இந்த இடத்தை விட்டு நம்ம வேகமா வெளியே போகணும் என்று கிளம்புகிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிய அடுத்து என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.