New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/19/Y5cgkDvf6cKXYqrP3btZ.jpg)
ரோஹினி மலேசிய பெண் இல்லை என்று சந்தேகப்படும் முத்து அதை நிரூபிக்க, ஒரு முடிவு எடுத்துள்ளார். இதனால் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், முத்து மீனா ஜோடி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. மூன்று ஆண் பிள்ளைகளை பெற்ற ஒரு பெண் தனது முதல் மற்றும் கடைசி மகனின் நலனை பார்த்தாலும், 2-வது மகனை கண்டுகொள்வதில்லை. இதற்கு காரணம் என்ன என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.
இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் அப்பாவாக நடிக்கும் இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் முத்து – மீனா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில்,அவ்வப்போது இவர்களுக்கு இடையே மோதலும் காதலும் கலந்த காட்சிகள் வெளியாகி வருகிறது. அதேபோல், வில்லி கேரக்ரான விஜயா அடிக்கடி பல்பு வாங்கும்போது காமெடியாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதனிடையே, மனோஜின் முன்னாள் காதலி ஜீவாவிடம் இருந்து பணம் வாங்கிய விஷயத்தை தெரிந்துகொண்ட முத்து, ரோஹினியிடம் பெரிய ரகசியம் உள்ளது என்ற சந்தேகத்தை கிளப்பிய முத்து தற்போது அதை கண்டுபிடிக்க ஒரு திட்டத்தை எடுத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், முத்து குடும்பத்துடன், மலேசியா போகலாம் என்று குடும்பத்திடம் சொல்ல, ரோஹினி அதிர்ச்சியாகிறாள். அதை பார்த்த முத்த சந்தேகப்பட, என்ன ரோஹினி எங்களை மலேசியாவுக்கு கூட்டி போக மாட்டீங்களா என்ற கேட்கிறாள் மீனா.
இவர்களின் நடவடிக்கையை பார்த்த ரோஹினி, மனோஜை தனியாக அழைத்து என்று எங்க அப்பா, ஜெயில்ல இருக்கும்போது இவர்கள் அங்கு போவது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல, மனோஜ் அதை விஜயாவிடம் வந்த சொல்கிறான். அப்போது மீனா, சம்பந்தி ஜெயிலில் இருக்கும்போது நாம போய் பார்க்க வேண்டாமா அத்தை அவங்க என்ன நினைப்பங்க என்று கேட்க, விஜயா நாங்கள் மலேசிய பேய்ட்டு வருகிறோம் என்று சொல்கிறார் அத்துடன் ப்ரமோ முடிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.