New Update
/indian-express-tamil/media/media_files/8pBt0LxI6hIYhXu6usgL.jpg)
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், முத்து மீனா ஜோடி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், அடுத்த வார எபிசோடுகளுக்கான ப்ரமோ தற்போத வெளியாகியுள்ளது.
மூன்று ஆண் பிள்ளைகளை பெற்ற ஒரு பெண் தனது முதல் மற்றும் கடைசி மகனின் நலனை பார்த்தாலும், 2-வது மகனை கண்டுகொள்வதில்லை. இதற்கு காரணம் என்ன என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் அப்பாவாக நடிக்கும் இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் முத்து – மீனா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில்,அவ்வப்போது இவர்களுக்கு இடையே மோதலும் காதலும் கலந்த காட்சிகள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த ஜோடி என்று பரிசு பெற்ற முத்து மீனா ஜோடிக்கு இடையே தற்போது மீண்டும் மோதல் போக்கு உருவாகியுளளது. அடுத்த வார எபிசோடுகளுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது.
மீனாவின் தம்பி சத்யாவின் நடவடிக்கை பிடிக்காத முத்து, அவ்வப்போது அவனுக்கு அட்வைஸ்’ செய்து வருகிறார். ஆனாலும் சத்யா தனது செயலை மாற்றிக்கொள்ளாத நிலையில், அவன் பிறந்த நாளுக்காக, கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடத்துக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்ற மீனா கேட்க, அங்கு போக வேண்டாம் என்று முத்து சொல்லி விடுகிறார். இதை மீனா சத்யாவிடம் சொல்ல, எனக்காக பூஜையே வேண்டாம் என்று சொல்கிறான்.
அப்போது வீட்டுக்கு வரும் ஸ்ருதி, நிங்க என்ன முத்துவுக்கு அடிமையாகவா இருக்கீங்க, போய்ட்டு வாங்க என்று சொல்ல, மீனாவும் கிளம்பி கோவிலுக்க செல்கிறாள். இதை பார்த்துக்கொண்டிருந்த விஜயா முத்து வந்தவுடன், உன் பேச்சை கேட்காமல், மீனா கோவிலுக்க சென்றவிட்டால் என்ற செல்ல, முத்து கோபத்தில் கோவிலுக்க செல்கிறான். அங்கு மீனா கூழ் ஊற்ற, முத்து அவளது கையை பிடிக்கிறான். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. இதனால் அடுத்து இவர்களுக்கு இடையே மோதல் வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.