விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் நாயகியாக மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கோமதி பிரியா, சல்மா அருணுடன் இணைந்து போலீஸ் ஸ்டேஷன் முன்பு நடனமாடிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் தென் பகுதியான மதுரையை சேர்ந்தவர் கோமதி பிரியா. படிப்பை முடித்து சென்னையில் வேலை செய்துகொண்டே மாடலிங்கில் ஈடுபட்டு வந்த இவருக்கு விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கோமதி பிரியா அடுத்து, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த ஓவியா என்ற சீரியலில் நடித்திருந்தார்.
இந்த இரு சீரியல்களும் அவருக்கு பாராட்டுக்களை பெற்று கொடுத்த நிலையில், அடுத்து விஜய் டிவியின் வேலைக்காரன் சீரயிலில் நடித்திருந்த கோமதி பிரியா தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். வெற்றி வசந்த், அனிலா ஸ்ரீகுமார், சல்மா அருண், ஸ்ரீதேவா, ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் நடித்து வரும் இந்த சீரியலில் இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் முத்து – மீனா இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கோமதி பிரியா அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சம்பவங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது போலீஸ் ஸ்டேஷன் முன்பு டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மீனா கேரக்டரில் நடித்து வரும் கோமதி பிரியா, ரோஹினி கேரக்டரில் நடித்து வரும் சல்மா அருண், மனோஜின் முன்னாள் காதலி ஜீவா ஆகிய மூவரும், ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றபடி காதல்னா சும்மா இல்லை படத்தில் வரும் என்னமோ செய்தாய் நீ, என்ன தான் செய்தாய் நீ என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதில் பலரும், ஜீவா எடுத்து போன 27 லட்சம் கிடைத்தால் அதை இப்போது ரோஹினி எடுத்து சென்றுவிடுவார் என்றும், இந்த 3 பேரில் இருவர் மனோஜ் தனக்கான பார்த்தது, ஒருவர் மனோஜ்க்காக பார்க்கப்பட்டவர் என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“