விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் ரோஹினி மனோஜ் இருவரும் குடும்பத்திடம் மாட்டிக்கொண்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், முத்து வீட்டில் கோர்ட் செட்டப்பை கொண்டுவ, மற்றவர்கள் எதுவும் புரியாமல் கேட்க, கொஞ்சம் இருங்க, வீட்டில் ரெண்டு குற்றவாளிகள் இருக்காங்க, அதில் முதல் குற்றவாளியை விசாரிக்கலாம் என்று கூறி மனோஜ்ஜை கூண்டிற்குள் நிப்பாட்டுகிறான். அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த 27 லட்சத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான். அதை இவனிடம் இருந்து ஒரு பெண் எடுத்து சென்றுவிட்டாள்.
இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இப்போ ஒரு புது விஷயம் சொல்லப்போகிறேன். அந்த பொண்ணுக்கிட்ட இருந்து 4-5 மாசத்திற்கு முன்னே, 27 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து 30 லட்சமாக வாங்கிவிட்டான். இதை வீட்டில் மறைத்துவிட்டான் என்று சொல்ல, குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இதை கேட்ட மனோஜ் அதிர்ச்சியடைந்தாலும், அவன் பொய் சொல்கிறான் என்று சொல்லி சமாளிக்கிறான்.
அதே சமயம், ரோஹினி, இந்த விஷயத்தை முத்து கண்டுபிடிச்சிட்டானே என்று அதிர்ச்சியானாலும், அவனிடம் சாட்சி இருக்காது என்று நினைத்துக்கொண்டு, உங்கக்கிட்ட என்ன சாட்சி இருக்கு என்று கேட்க, ரொம்ப நல்ல கேள்வி கேட்டீங்க, என்ட சாட்சி இருக்கு என்று சொன்ன, ரோஹினி மேலும அதிர்ச்சியாகிறாள். ஆனாலும் இவரே ஒரு ஆளை தயார் செய்து அப்படி பேச சொல்லியிருப்பார் என்று சொல்ல, மீனா முத்துவுக்காக சப்போர்ட் செய்கிறாள்.
அதை கேட்ட முத்து, கொஞ்சம் இரு மீனா என்று சொல்லிவிட்டு, ஜீவாவை அழைக்கிறான் அவளை பார்த்தவுடன், மனோஜ் ரோஹினி இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். ஜீவா வந்து அண்ணாமலையிடம், நான் தான் ஜீவா உங்க பையனை ஏமாற்றியது. நான். அவன் உங்களை ஏமாற்ற நினைத்தான். நான் அவனை ஏமாற்றிவிட்டேன். இதை கேட்ட விஜயா, இவள்ட இதுக்கு பேசுறீங்க, போலீஸ்க்கு போன் பண்ணுங்க என்று சொல்ல, எதுக்கு போன் பண்ணனும் நான் தான் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேனே என்று சொல்லி, பேங்க் ஸ்டேட்மெண்டை எடுத்து காட்டுகிறாள்.
இதை பார்த்த ரவி ஸ்ருதி இருவரும் மனோஜ் பணம் வாங்கியது உண்மை தான் என்று சொல்ல, அதன்பிறகு ஜீவா, தான் ரோஹினி பியூட்டி பார்லரில் சென்று மாட்டிக்கொண்டது, ரோஹினி மனோஜ் இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பணம் வாங்கிக்கொண்டது. அதற்கு முத்து சாட்சி கையெழுத்து போட்டது என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். மனோஜ், ரோஹினி இருவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதன்பிறகு முத்துவுக்காக தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு ஜீவா கிளம்புகிறாள்.
விஜயா, மனோஜ் சட்டையை பிடித்து ஏன் இதை சொல்லவில்லை என்று கேட்க, நான் சொல்லிவிட்டு பணத்தை வீட்டில் கொடுத்துவிடலாம் என்று சொன்னேன், ரோஹினி தான் பிஸினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஐடியா கொடுத்தாள் என்று சொல்லிவிடுகிறான். இதை கேட்ட விஜயாக, அதிர்ச்சியில், பிஸினஸ்க்கு உங்க அப்பாதான் பணம் கொடுத்தார் என்று சொல்லி ஏமாத்திட்டீயே என்று சொல்லி ரோஹினியிடம் கோபப்பட அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.