/indian-express-tamil/media/media_files/1qH3sbItZdrergawc5xR.jpg)
சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விஜய் டிவியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டே செல்கிறது. இந்த சீரியல் முழுக்க குடும்ப பிரச்சனை தான் என்றாலும் கூட, அந்த பிரச்சனைகள் அனைத்தும் சுவாரஸ்யமாக செல்வதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனிடையே இன்றைய எபிசோடு தொடர்பான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. வீட்டில் மனோஜ், முத்து, ரவி ஆகிய மூவரும் தங்களது மனைவியை தூக்கிக்கொண்டு சுற்றி வரும் நிலையில், இதை பார்த்து கடுப்பான விஜயா, இதையெல்லாம் உங்கள் ரூமில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறாள். இதை கேட்ட அண்ணாமலை 3- பேருக்கும் ரூம் இல்லை என்று யோசிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, மாடியில் வீடு கட்டுவதற்காக முயற்சி செய்ய, அதற்கு 5 லட்சம் செலவு ஆகும் என்று சொல்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்று யோசிக்கும்போது வீட்டு பத்திரத்தை வைக்கலாம் என்று அண்ணாமலை யோசிக்க, அதற்கு விஜயா நான் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறார். இந்த விஷயத்தை ஸ்ருதி மூலமாக தெரிந்துகொண்ட அவரின் அம்மா சுதா, வீட்டில் சண்டையை ஏற்படுத்த 5 லட்சம் பணத்துடன் வருகிறாள்.
இந்த வீடு கட்டவே என் புருஷன் தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணார் என்று ஏளனமாக பேசிவிட்டு, மேலே வீடு கட்டவும் 5 லட்சம் பணம் கொடுப்பதாக சொல்ல, அதை வாங்க அண்ணாமலை மறுக்கிறார். வீட்டில் அனைவரும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னாலும், அண்ணாமலை மறுக்க, முத்து வேண்டாம் என்று சொல்லிவிடுகிறான். இதை கேட்ட மனோஜ், இந்த வீட்டை நீங்களே எடுத்துக்கிட்டு எங்களை வெளியில் துரத்தலாம் என்று நினைக்கிறீங்களா சுயநலவாதிகளா என்று சொல்கிறான்.
இதை கேட்ட முத்து மனோஜ்ஜை அடிக்க போக, நாம வந்தவேலை முடிந்தது என்று சுதா சிரித்துக்கொண்டே இருக்கிறாள்.இந்த பிரச்சனை பெரியதாக வெடிக்க, வீட்டில் மாடியில் வீடு கட்ட செலவாகும் 5 லட்சத்தையும் என் கணவரே கொடுப்பார் இது சத்தியம் என்று சொல்லிவிட முத்து அதிர்ச்சியில் பார்க்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.