விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தினசரி எபிசோடுகள், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வீடு வாங்குவது தொடர்பான முயற்சியில் 37 லட்சத்தை பறிகொடுத்த மனோஜ் ரோஹினி இருவரும், அந்த பணத்தை எப்படியாவது திரும்ப வாங்க வேண்டும் என்று முடிவு செய்து பேசிக்கொண்டிருக்கும்போது, உங்க அப்பாவிடம் பணம் கேட்கலாம் என்று மனோஜ் சொல்ல, ரோஹினி கோபப்படுகிறாள். என்ன உங்க அம்மாவும் இப்படியோ சொல்றாங்க, நீயும் அப்பாவிடம் பணம் கேட்கலாம் என்று சொல்ற, இப்படி கேட்ட அவர் நம்ம குடும்பத்தை பற்றி என்ன நினைப்பார்?
அதுவும் இல்லாமல் அப்பா இப்போது ஜெயிலில் இருக்கிறார். அவரிடம் இப்போது எந்த உதவியும் கேட்க முடியாது. அதனால், நம்மை ஏற்றமாற்றியவனை கண்டுபிடித்து அந்த 37 லட்சம் பணத்தை திருப்பி வாங்க வேண்டும் என்று சொல்கிறாள். மறுபக்கம் கல்யாண ஆர்டர் எடுப்பதற்காக, சிந்தாமணி ஒரு வீட்டிற்கு சென்று ஆர்டர் கேட்டுவிட்டு வெளியில் வர, அப்போது அந்த வீட்டுக்கு மீனா வருகிறாள். மீனா உள்ளே சென்றுவிட்டு வெளியில் வரும்போது சிந்தாமணி, நான் ஆர்டர் வாங்க வந்த விஷயம் தெரிந்து நீயும் வந்தியா என்று கேட்கிறாள்.
இதை கேட்ட, மீனா மீண்டும் உள்ளே சென்று, ஆர்டர் கொடுங்கள் என்று கேட்டுவிட்டு வெளியில் வந்து, நான் டெய்லி போகனுமா என்று தான் கேட்க வந்தேன் நீங்கள் சொன்ன பிறகு தான் கல்யாண ஆர்டர் வாங்கலாம் என்ற ஐடியா வந்தது. இதே மாதிரி எனக்கு ஐடியா கொடுங்கள் உங்களுக்கு கமிஷன் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறாள். அடுத்து, மீனாவை காதலிப்பதாக சுற்றிக்கொண்டிருந்த நபர், ரோஹினியின் தோழி, வித்யாவின் பைக்கில் மோதிவிடுகிறார்.
அப்போது வித்யாவின் பைக் ஸ்டார்ட் ஆகாத நிலையில், இந்த வண்டியை டோப் செய்து கொண்டு செல்கிறார் அந்த நபர் இதை பார்த்த பலரும் ஒரு பையன் ஒரு பெண்ணை தள்ளிக்கொண்டு செல்கிறான் என்று சொல்ல, வித்யா சிரிக்கிறாள். அதன்பிறகு, செல்வம், டிரைவிங் ஸ்கூல் வைக்கலாம் என்று முத்துவிடம் சொல்ல, நல்ல ஐடியா தான், அதற்கு இடம் வேண்டுமே என்று சொல்ல, அப்போது மீனா அங்கு வருகிறாள். அவளிடம் அந்த வீட்டு புரோக்கரின் நண்பர் வீட்டுக்கு போய்விட்டு வந்தியா என்று முத்து கேட்கிறான்.
நான் போனேன். அவரை பார்த்தால், ஏமாற்றுபவர் மாதிரி தெரியவில்லை. என்று சொல்கிறாள். அதன்பிறகு டிரைவிங் ஸ்கூல் ஐடியாவை முத்து மீனாவிடம் சொல்ல, அவளும் நல்ல ஐடியா என்று சொல்கிறாள். அடுத்து வீட்டில், விஜயாவை மனோஜ் ரோஹினி இருவரும் பார்க்க, பணம் ரெடி பண்ணியாச்சா என்று கேட்க, அப்பாவிடம் இப்போதைக்கு பணம் கேட்க முடியாது. வெளியில் ரெடி பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன் என்று ரோஹினி சொல்கிறாள்.
அப்போது வீட்டுக்கு வரும் முத்து மீனா இருவரும் இவர்களை ஏமாற்றியவர்களை நாங்களும் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம் என்று சொல்ல, அந்த நபரை சீக்கிரமா கண்டுபிடித்து எனக்கு பணத்தை வாங்கிக்கொடு என்று மனோஜ் திமிராக பேச அதற்கு முத்து சரியாக திட்டிவிட அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.