விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ரோஹினி எடுத்த முத்துவின் போன் மீண்டும் முத்துவிடமே கிடைத்துவிட்டதால் எந்த நேரத்தில் மாட்டுவோம் என்று நினைத்து பயத்தில் இருக்கும் ரோஹினி, படுத்துக்கொண்டிருக்கும்போது, கனவில் மீனா பேயாக வந்து பயமுறுத்துகிறார். இதனால் என்னை விட்டுவிடு என்று ரோஹினி தூக்கத்தில் உளறிக்கொண்டு எட்டி உதைக்க, மனோஜ் படுக்கையில் இருந்து கீழே விழுந்துவிடுகிறான்.
அதன்பிறகும் ரோஹினி, விட்டுவிடு என்று சொல்லி கத்திக்கொண்டே இருக்க, மனோஜ் அவனது அம்மாவுக்கு போன் செய்து, கொஞ்சம் ரூமுக்கு வாமா என்று சொல்ல, விஜயா ரூமுக்கு வரும்போது ரோஹினி ஆடிக்கொண்டு இருக்கிறாள். இதனால் அதிர்ச்சியாகும் விஜயா அவளை தட்டி எழுப்பிவிட்டு தண்ணீர் கொடுக்கிறாள். மலேசியாவில் இறந்த அப்பா தான் மகளை பார்க்க வந்திப்பதாக நினைக்கும் விஜயா, ரோஹினிக்கு வியூதி பூசுமாறு மனோஜிடம் சொல்கிறாள்.
அதன்பிறகு ஸ்ருதி ரவி இருவரும் ரூமில் பேசிக்கொண்டிருக்க, ரவி சொல்லும் அனைத்திற்கும் ஸ்ருதி சந்தேகமாகவே கேள்வி கேட்க, அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று ரவி ஓடிவிடுகிறான். அதன்பிறகு ஸ்ருதி சிரிக்க, மீனா வந்து விசாரிக்கிறாள். அப்போது சும்மா ஜாலிக்காக இப்படி செய்தேன் என்று சொல்லி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க என்று சொல்கிறாள். இதை கேட்ட மீனாவும் முத்துவிடம் அப்படியே செய்ய முத்து டென்ஷன் ஆக, கடைசியில் இருவரும் பேசிவிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விஜயா, மனோஜ், ரோஹினி ஆகிய மூவரும், பார்வதி வீட்டுக்கு வருகின்றனர். இங்கு எதற்காக வந்தோம் என்று ரோஹினி மனோஜ்ஜிடம் கேட்க, பார்வதியும் விஜயாவிடம் என்ன என்று விசாரிக்க, மலேசியாவில் இறந்த அப்பா பொண்ணை தேடி இங்கு வந்துவிட்டார் என்று விஜயா சொல்ல, ரோஹினியும் பார்ப்பவர் எல்லோரையும் முறைத்துக்கொண்டு இருக்கிறாள். அப்போது அங்கு பேய் ஓட்டுவதற்காக சாமியார் வர அவரை பார்த்து ரோஹினி அதிர்ச்சியாகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.