சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து பரசுராமன் வீட்டில் அவரது மகள் திருமணம் குறித்து பெசிக்கொண்டிருக்கிறான். அப்போது உங்கள் மகள் நல்ல பையனைத்தான் செலக்ட் பண்ணிருக்க, நீங்க சம்மதம் சொன்ன கல்யாணத்தை முடித்தவிடலாம என்று சொல்ல, முதலில் மறுக்கும் பரசு அதன்பிறகு ஒப்புக்கொள்கிறார். அவரது மனைவி, பெரிய பெண்ணை பெரிய இடத்தில் கட்டி கொடுத்திருக்கோம் சொந்தகாரங்க எதாவது சொல்வாங்க என்று சொல்கிறார்.
இதை கேட்ட முத்து கல்யாணத்துக்கு ஒரு லட்சம் பணம் கேளுங்க, கல்யாணத்துக்கே வராமல் ஓடிவிடுவார்கள், சொந்தகாரங்க முக்கியமா இல்ல உங்க பொண்ணு முக்கியமாக என்று கேட்க, அவரும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். அதன்பிறகு, பொண்ணு வீட்டில் பேசுவதற்காக, கறிக்கடை மணி, பரசு வீட்டுக்கு வர, வீட்டு கேட்டுக்கு முன்பு வந்தவுடன், நல்ல விஷயம் பேசும்போது ஸ்வீட் இல்லை என்றால் எப்படி என்று கடைக்கு சென்றுவிடுகின்றனர்.
அப்போது முத்துவும் மீனாவும், அங்கிருந்து கிளம்பி மாப்பிள்ளை வீட்டில் பேசுகின்றனர். மாப்பிள்ளை வீட்டில் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும்,முத்துவும் மீனாவும் பேசி ஒப்புக்கொள்ள வைக்கின்றனர். அப்போது, கறிக்கடை மணி, போன் செய்து பொண்ணு வீட்டில் பேசிவிட்டேன். எல்லாம் நல்லவங்களா இருக்காங்க என்று சொல்ல, பொண்ணு வீட்டில் இருந்து இங்கு வந்து பேசிட்டு இருக்காங்க என்று சொல்கிறார். அதன்பிறகு, தட்டை மாற்றிக்கொள்ளுமாறு மீனா முத்து சொல்கின்றனர்.
எங்கள் மாமா வந்துவிட்டும் என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்ல, அவரை அப்புறம் பார்த்துக்கொள்கிறோம். இப்போது வேலை இருக்கிறது தட்டை புடிங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வருகின்றனர். அன்பிறகு மனோஜ் ஷோருமில் இருக்கும்போது, ஒருவர் வருகிறார். என்ன பொருள் வாங்க போறீங்க என்று கேட்க, நான் டாட்டு போட வந்தேன் என்று அவர் சொல்ல, மனோஜ் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல, ரோஹினி மனோஜ் பெயரை டாட்டூ போட்டுக்கொள்கிறாள்.
அதன்பிறகு வீட்டுக்கு வந்தவுடன், ரோஹினி டாட்டூ போட்டிருப்பதை மனோஜ் வீட்டில் சொல்ல, முத்துவும் மீனாவும் என்ன என்று தெரியாமல், வழிக்க, ஸ்ருதியும் ரவியும் விளக்கி சொல்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.