scorecardresearch

சித்தி- 2 என்ட் கார்ட்… ராதிகா எடுத்த முடிவு?

Tamil Serial Update : தொடரில் இருந்து நடிகை ராதிகா வெளியேறியதில் இருந்து சீரியலின் டிஆர்பி ரேட்டிங் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tamil Serial Chithi 2 Going Off – Air Soon? : சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் சன்டிவிக்கு முக்கிய இடம் உண்டு. அதேபோல் சன்டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. சன்டிவிக்கு நிகராக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் விஜய் டிவியின் பல சீரியல்கள் சீசன் 2 ஒளிபரபரப்பாகி வருவதைபோல் சன்டிவியில் சித்தி 2 சீரியல் தொடங்கப்பட்டது.

90-ஸ் குழந்தைகளின் மனம் கவர்ந்த சீரியலகளில் ஒன்றான சித்தி 2 சீரியல் கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னணி நடிகைகளில் ஒருவராக ராதிகா மற்றும் சிவக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த சித்தி சீரியல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2001-ம் ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நடிகை ராதிகா அதன்பிறகு அண்ணாமலை, வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட பல தொடர்களை தயாரித்து நடித்து வந்தார். அந்த வகையில் சன்டிவியின் முதல் 2-ம் பாகம் சீரியலாக 22 வருட இடைவெளிக்குப் பிறகு சித்தி 2 கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சீரியல் சில மாதங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஒளிபரப்பானது.

ஆனால் தொடக்கம் முதலே சித்தி 2 சீரியலில் இருந்து நடிகர்கள் பலரும் வெளியேறி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் நடிகை ராதிகாவே சித்தி 2 சீரியலில் இருந்து வெளியேறினார். ஆனாலும், அவருக்கு பதிலாக யாரும் கமிட் ஆகாத நிலையில், சீரியலின் கதையை வேறு தளத்திற்கு மாற்றி ஒளிபரப்பி வந்தனர். ஆனால் தற்போது சித்தி 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடரில் இருந்து நடிகை ராதிகா வெளியேறியதில் இருந்து சீரியலின் டிஆர்பி ரேட்டிங் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத நிலையில், சித்தி 2- சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ராதிகா தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னி சி/ஒ வாணி என்ற சீரியலை தொடங்கியுள்ளார்.

இதன் காரணமாக சித்தி 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial sun tv chithi 2 going off air soon update in tamil