முடிவுக்கு வரும் சன்.டி.வி.யின் முக்கிய சீரியல்கள்?
சின்னத்திரை ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சீரியல்கள். அதிலும் சன். டி.வி. சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சன் டி.வி.யின் ரோஜா மற்றும் கயல் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த இரண்டு சீரியல்களும் டி.ஆர்.பி.ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வருகின்றன. இதனிடையே தற்போது இந்த இரண்டு சீரியல்களும் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருமண சர்ச்சைக்கு நடிகர் விளக்கம்
பிரபல சீரியல் நடிகர் பப்லு ப்ரித்விராஜ் 56-வயதாகும் நிலையில், மலேசியாவை சேர்ந்த 23 வயது இளம்பெண்னை திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள பப்லு ப்ரித்விராஜ், நான் 23 வயது பெண்னை திருமணம் செய்துகொண்டதாக எல்லோரும் போன் செய்து கேட்கிறார்கள். ஏதோ காமெடிக்காக என்று நினைத்தேன். ஆனால் அது வைரலாகிவிட்டது. நான் அப்படி யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்படி செய்தாலும் உங்களிடத்தில் சொல்லிவிட்டுதான் செய்வேன். நான் திருட்டுத்தனமாக எதையும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தாலியை கழற்றிவிட்டு நடிக்க மாட்டேன்- சீரியல் நடிகை கண்டிஷன்
சன்.டி.வி.யின் அபியும் நானும தொடரில் மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை வித்யா வினு மோகன் ஏற்கனவே திருமணமாகி தற்போது சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் எக்காரணம் கொண்டும் தாலியை கழற்றி வைத்துவிட்டு நடிக்க மாட்டேன். அப்படி எதாவது ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அந்த ப்ராஜக்டையே வேண்டாம் என்று சொல்லிவிடுவேன என்று கூறியுள்ளார்.
முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா?
சின்னத்திரையின் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா சமீபகாலமாக கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்தால் முடிந்துவிடும் என்ற நிலையில், தற்போது பாரதி டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்தவிட்டார். மறுபுறம் வெண்பாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அவர் பாரதியை திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில, தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் நாளை டி.என்.ஏ ரிப்போர்ட் வரும் என்று சொல்கிறார். இதனால் விரைவில் உண்மை தெரிந்து சீரியல் முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
முடிவுக்கு வரும் ஒரு ராஜகுமாரி
ஜீ தமிழின் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சீரியலின் 2-வது சீசன் ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் அதற்குள் முடிவுக்கு வருகிறதா என்று கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“