ஓவியாவுடன் திரைப்படத்தில் நடித்த சுந்தரி சீரியல் நடிகை : இவரை தெரிகிறதா?

பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த ஸ்ரீகோபியா அதன்பிறகு தனது கவனத்தை சின்னத்திரை பக்கம் திருப்பியுள்ளார்.

பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த ஸ்ரீகோபியா அதன்பிறகு தனது கவனத்தை சின்னத்திரை பக்கம் திருப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sri Gopika

நடிகை ஸ்ரீகோபிகா நீலநாத்

சன்டிவின் சுந்தரி சீரியலில் அனுப்பிரியா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீகோபிகா நீலநாத். இந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் ஸ்ரீகோபிகாஇதற்கு முன்பே பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் ஓவிய நடிப்பில் வெளியான 90 எம்.எல் என்ற படத்தில் 4 பெண் கேரக்டரில் ஒருவராக பாரு என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

Advertisment

தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த ஸ்ரீகோபியா அதன்பிறகு தனது கவனத்தை சின்னத்திரை பக்கம் திருப்பியுள்ளார். உயிரே என்ற தொடரின் சின்னத்திரையில் அறிமுகமாக ஸ்ரீகோபிகா,  அடுத்து சுதர், அன்பே வா 2 உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையின் மூலம் வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரீகோபிகா, பின்னர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி 2019-ல் வெளியான 90 எம்.எல். படத்தில் நடிப்பும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த ஸ்ரீகோபிகா, சன்டிவியின் சுந்தரி சீரியல் மூலம் பிரபலமாகியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மற்றும் ஸ்ரீகோபிகா நீலநாத் அனுப்பிரியா என்ற  முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நிலையில், ஜெய் ஸ்ரீனிவாஸ், மனோகர் கிருஷ்ணா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது சுந்தரி சீரியல் முடிந்து 2-வது சீசன் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சுந்தரி தற்போது மாவட்ட கலெக்டராக ஆகிவிட்ட நிலையில், அனுப்பிரியாவின் குழந்தையை வளர்த்து வருகிறார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sundari Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: