New Update
/indian-express-tamil/media/media_files/ASNi25u2DetfYEruu8eF.jpg)
தமிழ் சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்
தமிழ் சீரியல்களின் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
தமிழ் சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரியாலிட்டி ஷோக்களை விட சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் கிராமத்து பகுதிகளில் சன்டிவி சீரியல்களும், நகரத்தில் விஜய் டிவி சீரியல்களும் ஆக்கிரமித்து வரும் நிலையில், இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சீரியல்களின் ரசிகர்களாக மாறிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
சின்னத்திரையில் பல சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், மக்கள் மத்தியில் வரவேற்பை பொறுத்து சீரியல்கள் பெரும் டி.ஆர்.பி ரேட்டிங் தான் சீரியல்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் 10-ல் இடம் பெற்ற சீரியல்களை பார்க்கலாம்.
இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்கில், சன்டிவியின் புதிய சீரியலான சிங்கப்பெண்ணே சீரயில் 10.28 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. சன்டிவியின் கயல் சீரியல், 10.23 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வானத்தைபோல சீரியல் 9.79 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், எதிர்நீச்சல் 9.76 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது.
அதேபோல் சன்டிவியின் சுந்தரி சீரியல், 7.45 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திலும், இனியா சீரியல் 7.45 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், ஆனந்தராகம் சீரியல் 7.32 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 6.97 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் 6.12 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், பாக்கியலட்சுமி சீரியல் 6.12 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளது. வழக்கம்போல் டாப் 10 பட்டியலில் முதல் 7 இடங்களை சன்டிவி சீரியல்களே ஆக்கிரமித்துள்ள நிலையில், கடைசி 3 இடங்களில் விஜய் டிவி சீரியல்கள் பிடித்துள்ளது. இதில் ஜீ தமிழின் எந்த சீரியலுக்கும் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.