Advertisment
Presenting Partner
Desktop GIF

முடிவுக்கு வரும் சன் டி.வி.யின் ஹிட் சீரியல் : அதற்குள் ஏன் இந்த முடிவு? ரசிகர்கள் சோகம்

சமீபத்தில் சன் டி.வியின் பிரியமான தோழி மற்றும் அன்பே வா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சீரியல் முடிவுக்கு வர உள்ளது.

author-image
WebDesk
New Update
Sun TV Aruvi Serial

அருவி சீரியல்

சின்னத்திரை சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்ட நிலையில், அவ்வப்போது பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும், புதிய சீரியல்கள் என்டரி ஆவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளது.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சன்.டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக சன்டிவி சீரியல்களுக்கு டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முக்கிய இடங்கள் கிடைத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, சன்டிவி சீரியல் குழு அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறங்கி வருகிறது.

தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு வரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் சன்டிவியில், சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல், வானத்தைபோல, உள்ளிட்ட பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல் புன்னகைப்பூவே உள்ளிட்ட ஓரிரு சீரியல்கள் புதிதாக ஒளிபரப்பாகி வருகிறது. அதே சமயம் பழைய சீரியல்களும் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் அன்பே வா, மற்றும் பிரியமான தோழி ஆகிய சீரியல்கள் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மற்றொரு சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளது. அதன்படி, சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் எபிசோடு விரைவில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

நடிகரும் கதாசிரியருமான லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன், பழம்பெரும் நடிகை அம்பிகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் திடீரென முடிவுக்கு வருது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

sun tv serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment