/tamil-ie/media/media_files/uploads/2021/06/Kannana-Kanne.jpg)
இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. ஆனாலும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இதனால் தியேட்டர்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல திரைப்படங்கள் வெளியாக முடியாமல் தவித்து வரும் நிலையில், நெருக்கடிகளை சமாளிக்க ஒரு சில படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளன.
இதற்கிடையே படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த முடியாமல் ஒரு சில சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் சினிமா போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் 60 பணயாளர்களை மட்டுமே வைத்து நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் படப்பிடிப்புகள் குறிப்பிட்ட சில நடிகர்களை வைத்து பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதே போல ஒரு சில படப்பிடிப்புகளை சென்னையிலேயே நடந்த திட்டமிட்டு இருந்தனர்.
மேலும் சீரயல்களில் நேரத்தை கடத்த அந்த சீரியலில் டைட்டில் பாடல், மற்றும் இரு சீரியலகளை ஒன்றான இணைத்து மகா சங்கமம் என்ற பெயரிலும் ஒளிபரப்பி வருகின்றனர். இதில் சில சீரியல்கள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிப்பதாக உள்ளது. ஆனாலும் சீரியல் ரசிகர்கள் தொடர்ந்து இதனை கண்டுகளித்து வருகின்றனர். இதனால் எப்படியேனும் சீரியல் படப்பிடிப்பை எப்படியோனும் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சீரியல் குழுவினர், பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
இதில் விஜய் டிவி சீரியல்கள் படப்பிடிப்பு சில ரெசார்ட்டில் நடந்து நடைபெற்று வரும் நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலின் படப்பிடிப்பை சன் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா செட்டில் நடத்தி இருக்கிறார்கள். இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதனை பலரும் கேலி செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.