/indian-express-tamil/media/media_files/2025/03/31/cRaG0CnR6L72JDjhHvX7.jpg)
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சன்டிவி சீரியல்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட ரஞ்சனி சீரியல் அடுத்த வாரம் முடிவுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் கவனத்தை திசைதிருப்பும் வகையில் நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன்டிவியில், பல்வேறு சீரியல்கள் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் ஒவ்வொரு சீரியலுக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வரும் நிலையில், ஒரு சீரியல் முடியும் போது அந்த சீரியல் நட்சத்திரங்களுக்கு மட்டுமல்லால், ரசிகர்களுக்கும் ஒருவித கவலைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சீரியல் ஒளிபரப்பபை தொடங்கிய சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தால், ஏன் என்ன காரணம் என்ற கேள்விகள் எழும்.
அந்த வகையில் தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு புதிய சீரியல் முடிவுக்கு வர உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 4-ந் தேதி முதல் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரஞ்சனி. இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான புதுவசந்தம் படத்தின் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
5 நண்பர்களுக்கு இடையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியல், ஒளிபரப்பாக தொடங்கி 4 மாதங்களே ஆகும் நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னேற்றம் இல்லாதததால் இந்த சீரியல் அடுத்த வாரம் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு பெரியதாக வரவேற்பும் எதிர்பார்ப்பும் இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரஞ்சனி சீரியல் முடிவுக்கு வர உள்ளதால், அந்த நேரத்தில் அன்னம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி தொடங்கப்பட்ட அன்னம் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இந்த சீரியல், இரவு 10 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், வரவேற்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அயலி வெப் தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகை அபி நட்சத்திரா இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
முக்கோண காதல் கதையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பெற்று வருகிறது. இதனிடையே, 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அன்னம் சீரியல் 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதால், டெல்னா டேவிஸ் நடித்து வரும் ஆடுகளம் சீரியல் வாரத்தின் 7 நாட்களும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.