Roja Serial Episode Update : பையா கணேஷ் கொலை வழங்கு விசாரணையில், அனுவிற்கு சில நாட்களாக மனநிலை சரியில்லை. அவள் 3 மாதங்களாக மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதாக டைகர் மாணிக்கம் கூறுகிறார். அதற்கான சர்டிவிகேட்டையும் காண்பிக்கிறார். ஆனால், இதை ஏன் காலைலயே சொல்லல என அர்ஜுன் கேட்கிறான். அதே கேள்வியை நீதிபதிவும் கேட்க டைகர் மாணிக்கம் அமைதியாகிறார்.
அதன்பிறகு சாக்சி, அனு இருவரையும் ஒரு மாதம் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு விடுகிறார். அப்போது மாணிக்கம் அனுவை தன்னுடைய சொந்த ஜாமீனில் விடுவிக்குமாறு கேட்க, அதற்கு அர்ஜூன், எதிர்ப்பு தெரிவித்த்தால், அதனை ஏற்று கொள்ளும் நீதிபதி, அனு மற்றும் சாக்சி இருவரையும் ஒரு மாதம் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடுகிறார். மேலும் இந்த வழக்கில், சாந்த மூர்த்திக்கு எதிரான சாட்சிகள் எதுவும் நிரூபிக்கபடாததால் அவரை வழ்க்கில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிடுகிறார்.
அதன்பிறகு வெளியே வரும் சாந்தமூர்த்தி, ரோஜாவுக்கு நன்றி கூறுகிறார்.. அப்போது அர்ஜுன் உங்களை காப்பாற்ற தான் ரோஜா என்னைய கல்யாணமே பண்ணார் என சொல்கிறான். அதன்பிறகு அர்ஜுன், அவரை திரும்பவும் ஆசிரமத்தை எடுத்து நடத்த சொல்லும் போது, என்கிட்ட இப்போ எதுவுமே இல்லை என சொல்கிறார். அப்போது என்னோட அம்மா பெயர்ல ஆசிரமம் திறக்கலாம். அதுக்காக முதல் டொனேஷன்னா பத்து லட்சம் தர்றேன் என அர்ஜுன் சொல்கிறான்.
அப்போது சிறைக்கு அழைத்துச்செல்ல சாக்சி அனு இருவரையும் காவலர்கள் வெளியில் அழைத்து வரும்போது, அனுவிடம், சாக்சி இதுவரை என்னை நீ ஒரு பிரெண்ட்டா தான பார்த்த. இனிமே தான் எனிமியா பார்ப்ப. ஒன்னு மட்டும் நியாபகம் வச்சுக்க நீ ஜெயில்ல இருந்து உயிரோட வர போறது இல்லை என சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.
அப்போது மாணிக்கம், நீ இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத. இதை விட பெரிய கோர்ட் எல்லாம் இருக்கு. உன்னை எப்படியாவது வெளியே கொண்டு வர்றது என் பொறுப்பு என சொல்கிறான். அப்போது அருகில் வரும் ரோஜாவிடம், என்னை அப்பா அப்பான்னு சொல்லிட்டு என் மகள் அனுவை ஜெயிலுக்கு அனுப்பிட்டீல என மாணிக்கம் சொல்ல, அப்போது அர்ஜுன் இவ அனுவே இல்லை. அனு யாருன்னு புரிஞ்சுக்ககூடிய காலம் நிச்சயம் வரும் என சொல்கிறான்.
அதன்பின்னர் அவர் பேசுனதை பற்றி எல்லாம் யோசிக்காத. அவர் தோற்ற விரக்தியில் பேசுறாரு என ரோஜாவிடம் கூறும் அர்ஜுன், உனக்காக அம்மா ஆரத்தி ரெடி பண்ணி வச்சு இருக்காங்க. உன்னை நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க என கூறி அவளை அழைத்து செல்கிறான். இதற்கிடையில் வீட்டிற்கு வரும் அன்னப்பூரணி, அனு ஜெயிலுக்கு சென்ற விரக்தியில், அவளை பற்றி யோசித்து கொண்டிருக்கிறாள். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil