Advertisment

சன் டி.வி சீரியலுக்கு விரைவில் என்ட் கார்டு : நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு

சன்டிவியில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தாலாட்டு. கிருஷ்ணா, ஸ்ருதிராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Shrutiraj

Shrutiraj

சன்டிவியின் பிரபல சீரியலான தாலாட்டு விரைவில் முடிவடைய உள்ளதாகவும், இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் எபிசோடு விரைவில் ஒளிபரப்பாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சன்டிவியில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தாலாட்டு. கிருஷ்ணா, ஸ்ருதிராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியல் இதுவரை 600-க்கு மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ள நிலையில், விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாகவும், சீரியலின் க்ளைமேக்ஸ் எபிசோடுகள் 4 மணி நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இந்த சீரியலின் நாயகிய ஸ்ருதிராஜ் கூறுகையில்,

"தாலாட்டு புதிய மைல்கல்லை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்களை ஆதரித்த பார்வையாளர்களுக்கு மிக்க நன்றி. இசைப்பிரியா கதாபாத்திரம் விரைவில் முடிவுக்கு வரவிருப்பது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணத்தைத் தருகிறது" என்றார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தாலாட்டு சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment