சன் டி.வி சீரியல் திடீர் நிறுத்தம்: காரணம் புரியாமல் முக்கிய நடிகர் கொந்தளிப்பு

சமீபத்தில் திடீரென தாலாட்டு சீரியல் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சீரியலில் நடித்து வந்த நடிகர் நடிகைகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சமீபத்தில் திடீரென தாலாட்டு சீரியல் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சீரியலில் நடித்து வந்த நடிகர் நடிகைகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shruti Raj

தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்

சன் டிவியின் தாலாட்டு சீரியல் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், இது குறித்து சீரியல் நாயகன் கிருஷ்ணா வெளியிட்டுள்ள கோபமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சீரியல்கள் ஒளிபரப்பி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தாலாட்டு. கிருஷ்ணா சுருதி ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இந்த சீரியல் சூழ்ச்சியால் பிரிந்த தாயுக்கும் மகளுக்கமான பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.  

ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்துவிட்டாலும் அதன்பிறகு என்ன பிரச்சனை வருகிறது என்பதை நோக்கி திரைக்கதை நகர்ந்துகொண்டிருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் திடீரென தாலாட்டு சீரியல் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சீரியலில் நடித்து வந்த நடிகர் நடிகைகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது குறித்து சமீபத்தில் நடிகை சுருதி ராஜ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், தற்போது சீரியலின் நாயகன் கிருஷ்ணா கோபமான பதிவை வெளியிட்டுள்ளார். இதில், சீரியல் குழுவினர் வரும் ஆகஸ்ட் மாதம் வரை நிச்சயம் சீரியல் ஓடும், என முதலில் கூறி இருந்தார்கள். ஆனால் இப்போது திடீரென முடித்துள்ளனர். இதற்க்கு என்ன காரணம் என்பதை கூட தங்களிடம் முறையாக கூறவில்லை.

Advertisment
Advertisements

எனவே நிறைவு செய்யப்படாமல் சீரியலை பாதியில் நிறுத்த என்ன காரணம் என எங்களுக்கே தெரியவில்லை. அடுத்தடுத்து பல புது சீரியல்கள், ஒளிபரப்ப தயாராக இருப்பதாக கூறுகிறார்கள். மற்ற சீரியல்களை ஒளிபரப்ப தான் இப்படி பாதியிலேயே 'தாலாட்டு' சீரியல் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. என்று காட்டமாக கூறியுள்ளார் . கிருஷ்ணாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: