Tamil Actress Abitha Re-Entry In Zee Tamil Serial : சின்னத்திரையின் சீரியல்கள் தற்போது இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இப்போது பல சீரியல்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் பழைய சீரியல்கள் இன்னும் மக்கள் மத்தியில் பேசப்படும் நிலையில் தான் உள்ளது. தற்போது அந்த சீரியல்கள் ரீ-டெலிகாஸ்ட் செய்தாலும் முதல்முறை ஒளிபரப்பாவது போல் மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகினறன.
இதனை கருத்தில் கொண்டு சன்டிவியின் ஹிட் தொடர்களாக சித்தி, கோலங்கள், தென்றல் உள்ளிட்ட பல தொடர்கள் ரீ-டெலிகாஸ்ட் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க சீரியல்களில் ஒன்று திருமதி செல்வம். சஞ்சீ்வ் அபிதா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்த இந்த சீரியல் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இநதி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.
டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்த இந்த சீரியல் முடிந்த பிறகு நடிகை அபிதா தங்கமான புருஷன் என்ற தொடரில் நடித்தார். அதன்பிறகு தனது குடும்பத்துடன் கேரளாவில் செட்டில் ஆன அபிதா அதன்பிறகு நடிப்பில் இருந்து விலகினார். இவர் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு சன்டிவியில் ஒளிபரப்பான முத்தாரம் என்ற தொடரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு 5 வருட இடைவெளிக்கு பிறகு 2019-ம் ஆண்டு லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்தார். அதன்பிறகு சீரியலில் நடிக்காத அபிதா தற்போது ஜீ தமிழ் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தெலுங்கு சேனிலில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற திரியாணி என்ற சீரியல் தற்போது ஜீ தமிழுக்காக ரீமெக் செய்யப்பட் உள்ளதாகவும் இந்த சீரியல் மூலம் அபிதா ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் எட்டுப்பட்டி ராசா படத்தில் பொன்வண்ணனின் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அபிதா பாலாவின் முதல் படமான சேது படத்தில் விக்ரம்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். கடைசியாக தமிழில் கடந்த 2007-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான நம்நாடு படத்தில் நடித்த அவர், தற்போது தீ இவன் என் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“