Tamil Serial Rating : ”நல்லா போய்கொண்டிருந்த சீரியல் இப்படி சொதப்பிட்டாங்களே – பாக்கியலட்சுமி நிலைமை பாருங்க…!

Serial Rating In tamil ; தமிழ் சீரியல்களுக்கு ரசிகர்களின் கருத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

Tamil Serial Rating Update : பெருகி வரும் தொழில்நுட்ப வளச்சியின் காரணமாக திரைப்படங்களை விட தொலைக்காட்சி சீரியல்களே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறன. அதனை கருத்தில் கொண்டு திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களை கொண்டு வர தொலைக்காட்சிகள் நாள்தோறும் புதிய புதிய முயற்சிகளில் களமிறங்கி வருகின்றன. அனைத்து சீரியல்களும் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் முன்விரோதம், பொறாமை ஆகியவற்றை மையமாக கொண்டு கதை நகர்ந்தாலும், அடுத்த நாள் எபிசோட்டில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களை சீரியல் பக்கம் திருப்பி விடுகிறது.

இதற்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைவது ப்ரமோ. வெறும் 30 வினாடிகளில் அடுத்த நாள் எபிசோட்டில் என்ன நடக்கும் என்பதை முந்தைய நாள் ப்ரேமோவில் ஓரளவு கணித்துவிடும் அளவிற்கு காட்சிகள் அமைந்திருக்கும். இதை வைத்துக்கொண்டே ரசிகர்கள் அடுத்த நாள் எபிசோட்டை பார்க்கலாமா வேண்டாமா என்பதை தீர்மாளித்துக் கொள்வார்கள்.  திரைப்படங்களுக்கு டீசர் டிரெய்லர் என்பது போல சீரியலுக்கு ப்ரமோ ஒரு வகை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்றே சொல்லாம்.

அந்த வகையில் இன்றைய சீரியல்களின் ப்ரமோகளுக்கு ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்போம் :

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

சீரியல் ரசிகர்களுக்கு ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திய சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு கண்டிப்பாக முக்கிய இடம உண்டு. அந்தஅளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்திவரும் இந்த சீரியல் வர டிஆர்பியில் பல வாரங்கள் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதில் இன்றைய எபிசோட்டின் ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் முல்லை கதிர் தம்பதி ப்ரமோ கட்சியில் இடம்பெற்றுள்ளது. இவர்களின் ரொமான்ஸ் கட்சியே ரசிகர்களுக்கு ஒருவகை எதிபார்ப்பை ஏற்படுத்துகிறது.

இந்த ப்ரமோவுக்கு ஒரு ரசிகர் இந்த சீன்ல நாங்க எதிர்பார்த்த்து சித்து (சித்ரா) அக்காவத்தான் மிஸ் யூ அக்கா என கமெண்ட் பதிவிட்டுள்ளார். மேலும் பல ரசிகர்கள் கதிர் முல்லை ரொமான்ஸ் கட்சி குறித்து சூப்பர் என்றே கூறியள்ளானர்.  இதில் சிலர் சித்ராவுக்கு (முன்னாள் முல்லை) ஆதரவாகவும்,காவியாவுக்கு (இந்நாள் முல்லை) எதிராகவும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

பாக்கியலட்சுமி :

ஒரு இல்லத்தரசியின் வாழ்கை போராட்டத்தை மையமாக வைத்த இந்த சீரியல் தொடங்கத்தில் வரவேற்பை பெறாமல் இருந்தாலும் தற்போது பலஅதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருவதால் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ப்ரமோவில் வீட்டிற்கு தெரியாமல் ஸ்கூட்டி ஓட்ட கற்றுக்கொள்ளும் பாக்யா, தனது மாமா மற்றும் அத்தை மீது மோதுகிறார். காமெடி கலாட்டாவாக உள்ள இந்த ப்ரமோ குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்  ரசிகர் ஒருவர் பாக்யா மைன்ட் வாய்ஸ்எடுத்தேன் பாரு ஓட்டம் என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் பாக்யா புடவை பார்த்து கூடவா அடையாளம் தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் என்னாட ஒரு காமெடியா இருக்கு என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

இதில் மற்றொரு ரசிகர்கள் ராதிகா கேரக்டர் மாற்றத்திற்கு, ‘’நல்லா போய்கொண்டிருந்த சீரியல் ரேஷ்மாவ போட்டு சொதப்பிட்டாங்களே’’ என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் இந்த சீன் வாணி ராணி சீரியலில் வரும் பாக்யா செம.. என பதிவிட்டுள்ளார். இதில் பலரும் பாக்யாவுக்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளனர். ஒரு ரசிகர் ‘’சமீப காலங்களில் இதயம் தொட்ட தொடர்னா அது நம்ம பாக்யலட்சுமிதான்’’ என பதிவிட்டுள்ளார். இதில் மற்றொரு ரசிகர் இடிச்சது கையில அதுக்குள்ள மேலயா… .இப்போ பாக்யா அக்காக்கு பாட்டியபத்தி நல்லா தெரிஞ்சிகிட்டிங்களா’’என பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

கணவன் மனைவிக்குள் நடக்கும் மோதல் போக்கை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த ப்ரமோவில், பாரதி ஹேமாவுடன் அமெரிக்கா செல்ல இருப்பதாக சொல்ல அதற்கு கண்ணம்மமா ஆல் தி பெஸ்ட் என்று சொல்கிறார்.

இதற்கு கமெண்ட் கொடுத்துள்ள ஒரு ரசிகர் ‘’கவலைப்படாதே கண்ணம்மா நீதான் நடந்தே அமெரிக்கா போவீயே ஒரு பேக்க கைல எடுத்துக்கோ’’ என பதிவிட்டுள்ளார். அதற்கு மற்றொரு ரசிகர் ‘’இவங்க அமெரிக்க போகமாட்டாங்கனு ஊருக்கே தெரியும்’’ என்று கூறியுள்ளார். இதில் மற்றோரு ரசிகர் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கலைனாலும் பரவால்லப்பா அந்த கொரோனா டெஸ்டாவது எடுத்துட்டு போ என பதிவிட்டுள்ளா.

அடுத்து ஒரு ரசிகர் அமெரிக்க போரதுக்கு முன்னாடி உண்மை தெரிஞ்சா நல்லா இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர் கொரானா காலத்துல விமானம் பாரதிக்கு தனியா விடுராங்க . அந்த விமானத்தின் பெயர் டின்ஏ ஏர்லைன்ஸ் என பதிவிட்டுள்ளார்.

இதில் ஒரு ரசிகர் யாருங்க இந்த சீரியல் ஓட டைரக்டர் pls டக்குனு முடிங்க…. போட்டு அறுக்குறீங்க… ஐ லைக் பாரதி பட் அவரோட கேரக்டர் இந்த சீரியல் ல ரெம்ப மோசமா காட்டுறீங்க.. என பதிவிட்டுள்ளார்.

ராஜாராணி 2 :

குடும்பத்தில் மாமியார் மருமகள் இடையே நடைபெறும் மோதல் போக்கை அடிப்படையாக வைத்து இந்த சீரியல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ப்ரமோவை பார்த்தை ஒருவர் ‘’இந்த டைரக்டர் எல்லா படத்துடைய பாட்டுகளையும் குத்தகைக்கு வாங்கிட்டார் போல’’ என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த மற்றொரு ரசிகர் சரவணன் : கல்யாணம் பண்றது சேர்ந்து வாழறதுக்கு தான் என்று சொல்வது போலவும், அதற்கு சிவகாமி நான் விட்டா தானே என் கூறுவது போலவும் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் அந்த பிள்ளையை ஒரு தடவை எங்க ஊரு கூட்டுவாய ரோட்ல நிறைய பள்ளம் இருக்கு என பதிவிட்டுள்ளார்.  மேலும் இவங்க ரொமான்ஸ்க்கு அளவே இல்லையா என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.  அதற்கு மற்கொரு ரசிகர் ஏண்ணு தெரியல இவிங்க romance a பாத்தாலே எனக்கு சஞ்சய் தான் நியாபகத்துக்கு வராங்க..உங்களுக்கு எப்பிடி என கேட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் இப்போதான் நல்லா போய்கிட்டு இருக்கு என பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர் நடுரோட்டில் இப்படி குச்சிய நட்டு வச்சா 4 வீலர் வண்டி எல்லாம் எப்படி போகும் என பதிவிட்டுள்ளார்.

ரோஜா :

தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ள சீரியல் ரோஜா. குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பமே இந்த சீரியலின் கதை.

இந்த ப்ரமோவை பார்த்த பலரும் ரோஜாவை திட்டி திருகின்றன்னர். அணுவை சிறையில் இருந்து ரிலீஸ் பண்ண ரோஜாவுக்கு இதெல்லாம் பத்தாது என ஒருவர் பதிவிட்டுள்ளார். டைரக்டர் அர்ஜுன் ரோஜா வாழ்க்கைல நல்லா விளையாடுறாரு என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் அவ்வளவு பெரிய மாடியில் இருந்து கீழே விழுந்து அந்த அணு சாகல அது எப்படி என் கேள்வி எழுப்பியள்ளார்.

இதில் மற்றொரு ரசிகர் அர்ஜுன் ‌ ரோஜா. சந்தோஷமாக வாழ்வது போல் காமிச்சா அதுதான் இந்த. சீரீயலின் ஹைலைட்டே என பதிவிட்டுள்ளார். அனு ரோஜாவை கொல்ல எத்தனையோ தடவை முயற்சி பண்ணா அப்ப எல்லாம் இப்படி போலீஸ் பிரச்சனை வல்ல ஒரு தடவை அனு மேல இருந்து விழுந்தது மே ரோஜா தான் தள்ளிவிட்டாள் போலீஸ் புடிச்சிட்டு போது அப்படின்னா அனுவை எத்தனை தடவை போலீஸ் புடிச்சிட்டு போனோம் என ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

இந்த சீரியல் ப்ரமோக்கள் குறித்து ரசிகர்கள் பதிவிட்டுள்ள கருத்துகள் எடுத்துக்கொள்டால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருவது தெரிகிறது. அந்த சீரியலில் சித்ரா இல்லை என்று ஒரு சிலர் கமெண்ட் கொடுத்தாலும் பலரும் கதிர் முல்லை காட்சிக்கு ஆதரவாகதான் கமெண்ட் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial today promo rating update in tamil

Next Story
Sun TV Serial; அனுவின் திட்டத்தில் பலியாகப்போகும் அர்ஜூன்… காப்பாற்றுவாரா ரோஜா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com