Advertisment

டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடரும் சன் டிவி ஆதிக்கம்; டாப் 5-ல் புதிதாக நுழைந்த விஜய் டிவி சீரியல்

இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்; சன் டிவியுடன் மல்லுக்கட்டும் விஜய் டிவி; டாப் 10ல் ஆச்சரிய மாற்றங்கள்; எந்த சீரியல் எந்த இடத்தில்? முழு லிஸ்ட் இங்கே

author-image
WebDesk
New Update
Serial TRB Rating

இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்; சன் டிவியுடன் மல்லுக்கட்டும் விஜய் டிவி; டாப் 10ல் ஆச்சரிய மாற்றங்கள்; எந்த சீரியல் எந்த இடத்தில்? முழு லிஸ்ட் இங்கே

சின்னத்திரையின் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. அவற்றில் சில சீரியல்கள் ரசிகர்கள் மிகவும் விரும்பும் சீரியல்களாக உள்ளன. அந்த வகையில் இந்த வாரத்தில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் இடம் பிடித்த சீரியல் விவரங்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

சின்னத்திரையில் சீரியல்கள் என்றாலே சன் டிவி, விஜய் டிவி தான் முன்னணியில் உள்ளன. ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்களும் சீரியல்களை களமிறக்கி போட்டியில் குதித்து வருகின்றன.

அதேநேரம் ஒவ்வொரு வாரம் எந்த சீரியல் ரசிகர்களால் அதிகமாக விரும்பப்படுகிறது என்பதை டி.ஆர்.பி ரேட்டிங் தெரிவிக்கும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான ரேட்டிங்கை பார்க்கலாம். பெரும்பாலான இடங்கள் அப்படியே இருந்தாலும், புதிய சீரியல்கள் வரவால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.

முதலிடத்தில் எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து காலமானதால், அடுத்த குணசேகரன் யார்? சீரியல் இனி எப்படி செல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதனால், இந்த சீரியல் 9.88 புள்ளிகளைப் பெற்று இந்த வாரமும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

கயல் இரண்டாம் இடம்

சைத்ரா ரெட்டி நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் ஒரு சில வாரங்களாகவே இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரமும் 9.61 புள்ளிகள் பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூன்றாம் இடத்தை பிடித்த சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கலெக்டராக ஆன சுந்தரி எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளுடன் இந்த சீரியல் பரபரப்பாக சென்று வருகிறது. அதனால் கடந்த வாரத்தைப்போலவே இந்த வாரத்திலும் 9.12 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

நான்காம் இடத்தில் வானத்தைப்போல

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரமும் நான்காவது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரமும் 8. 95 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

டாப் 5ல் இடம் பிடித்த முதல் விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில், ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த முறை இந்த சீரியல் 8.17 புள்ளிகளை பற்றி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது.

ஒரு இடம் சரிந்த இனியா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் பல வாரங்களாக ஐந்தாம் இடத்தில் இருந்து வந்தது. ஆனால் இந்த வாரம் 8.16 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்திற்கு இறங்கியுள்ளது.

ஏழாவது இடத்தை தக்கவைத்துக் கொண்ட மிஸ்டர் மனைவி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தில் இருந்தது. இந்த வாரமும் ஏழாவது இடத்தில் நீடிக்கிறது. இந்த வாரத்தில் 7.86 புள்ளிகள் பெற்றுள்ளது.

எட்டாவது இடத்தில் நீடிக்கும் பாக்யலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரத்தில் எட்டாவது இடத்தில் இருந்தது. அது போலவே இந்த வாரமும் எட்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்த முறை 7.65 புள்ளிகள் பெற்றுள்ளது.

ஒரு இடம் முன்னேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த முறை பத்தாம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 6.70 புள்ளிகள் பற்றி ஒன்பதாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டாப் 10ல் நுழைந்த ஆனந்த ராகம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரம் 10 இடங்களில் வராமல் இருந்த நிலையில், இந்த முறை 6.27 புள்ளிகள் பெற்று பத்ததாவது இடத்தில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay Tv Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment