Advertisment

விறு விறுவென மேலே வந்த எதிர்நீச்சல்: டி.ஆர்.பி-யில் டாப் 10 சீரியல்கள் இவைதான்

இந்த வருடத்தின் 25-வது வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் அனைத்து சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி எதிர்நீச்சல் முன்னிலை பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Serial TRB Rating

தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது சினிமாவை காட்டிலும் சீரியல்கள் அதிக வரவேற்பை பெற்று வருவதால், நாளுக்கு நாள் சீரியல்களில் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இடம்பெற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதில் சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு மத்தியில் தான் பெரும்பாலான போட்கள் உருவாகி வருகிறது. நகரத்து பக்கம் விஜய் டிவி சீரியல்கள் வரவேற்பை பெற்று வரும் நிலையில், கிராமத்து மக்களிடையே சன்டிவி சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் டிஆர்பி ரேட்டிங் என்று வரும்போது இரண்டு சேனல் சீரியல்களும் மாறி மாறி முன்னணியில் இருந்து வருவது தொடர்ந்து வருகிறது.

ஆனால் சமீப காலமாக விஜய் டிவி சீரியலுக்கு சன்டிவி சீரியல் பெரும் போட்டியாக உருவாகிவிட்ட நிலையில், டிஆர்பி ரேட்டிங்கில் ஆதிகமும் செலுத்தி வருகிறது. இதனிடையே இந்த வருடத்தின் 25-வது வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் அனைத்து சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி எதிர்நீச்சல் முன்னிலை பெற்றுள்ளது.

எதிர்நீச்சல்

கோலங்கள் என்ற மெகாஹிட் சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது தடத்தை ஆழமாக பதித்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல்.பொதுவாகவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் ஆதிரையின் திருமணம் நடைபெற்றதால் டிஆர்பியில் முன்னிலை பெற்ற எதிர்நீச்சல் 11.16 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

கயல்

டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்ட சீரியல்களில் ஒன்றாக கயல் கடந்த வாரமும் முதலிடத்தை பிடித்த நிலையில், கயல் தற்போது எதிர்நீச்சலிடம் முதலிடத்தை இழந்துள்ளது. கயல் சீரியல் இந்த வாரம் 10.88 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பெற்றுள்ளது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பானது முதல் சின்னத்திரை ரசிகர்களின் அனுதாபத்தை சம்பாதித்த சுந்தரி சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.85 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பெற்றுள்ளது.

சன்டிவியில் வானத்தை போல சீரியல் 9.71 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தையும், இனியா சீரியல் 9.62 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தையும், சன்டிவியின் புதிய சீரியலான மிஸ்டர் மனைவி 8.88 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தையும், பெற்றுள்ளது.

பாக்கியலட்சுமி

சமீப வாரங்களாக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திருப்பத்துடன் அரங்கேறி வரும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 8.88 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை பிடித்துள்ளது. டாப் 10 சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நகர்புற பட்டியலில் பாக்கியலட்சுமி முதலிடத்தை பிடித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது சற்று விறுவிறுப்பு குறைந்துள்ள நிலையில், இந்த வாரம் 7.93 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பெற்றுள்ளது.

சன்டிவியின் ஆனந்த ராகம் சீரியல் தற்போது 7.01 புள்ளிகள் பெற்று இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 9-வது இடத்தையும், விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 6.59 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தையும் பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment