Advertisment

டாப் 5 சீரியல்கள்... முதலிடம் எந்த சீரியலுக்கு? ஜீ தமிழ் சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்

ஜீ தமிழில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட 5 ஜீ தமிழ் சீரியல்கள் என்னனென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil TRB Rating

ஜீ தமிழ் சீரியல்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அதிலும் குறிப்பாக ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளன.

Advertisment

இந்த நிலையில் மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சன்டிவி சீரியல்களை போல் ஜீ தமிழ் சீரியல்களுக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வியாழக்கிழமை வெளியாக வேண்டிய ரேட்டிங் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட 5 ஜீ தமிழ் சீரியல்கள் என்னனென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சன் டிவிக்கு சிங்கப்பெண்ணே, விஜய் டிவிக்கு சிறகடிக்க ஆசை சீரியல் போல், ஜீ தமிழுக்கு கார்த்திகை தீபம் சீரியல் உள்ளது. ஆனந்தின் கல்யாணம், மீனாட்சியின் அதிரடி என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல5.01 ரேட்டிங் புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

இந்த பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளது அண்ணா சீரியல். பெரிய பெண்ணான கனி, ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி, சௌந்தரபாண்டியன் சதி என்று ஒவ்வொரு நாளும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிய அண்ணா சீரியல் 4.46 என்ற ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ள சீரியல் சந்தியா ராகம். தனம், மாயாவுக்கு நடக்கும் சடங்குங்கள்.. தனத்தின் கனவுக்காக மாயா எடுத்த ரிக்ஸ் என அதிரடியான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிய சந்தியா ராகம் சீரியல் 3.96 என்ற புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில், 4-வது இடத்தில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் இடம்பெற்றுள்ளது. வில்லிகள் சதி, பொம்மியின் அதிரடி ஆட்டம் என திக் திக் நிமிடங்களுடன் ஒளிபரப்பாகிய நினைத்தாலே இனிக்கும் சீரியல் 3.33 என்ற ரேட்டிங்குடன் நான்காம் கிடைத்த பிடித்துள்ளது.

இந்த பட்டியலில், ஐந்தாவது இடத்தை புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய வீரா சீரியல் பிடித்துள்ளது. கண்மணியின் கர்ப்பம், கல்யாண ஏற்பாடு என பரபரப்பான கதையுடன் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியல் 2.98 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment