தமிழில் டாப் 10 சீரியல்கள் இவைதான்… சன் டிவி- விஜய் டிவி இடையே செம ஃபைட்!
Vijay tv and sun tv serial rating news in tamil: கடந்த வாரத்திற்கான டிஆர்பி விபரங்கள் தற்போது வெளிவந்துள்ள நிலையில், ரோஜா - பாரதி கண்ணம்மா சீரியல்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
Tamil serial TRP Rating in tamil: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் தங்களுடைய ஆதாரவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அதிக வரவேற்பை அளித்து வருகின்றனர். இதில், மக்கள் அதிகம் ரசிக்கும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பி விபரங்கள் வராந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
Advertisment
அந்த வகையில் கடந்த வாரத்திற்கான (14 ஆகஸ்ட் முதல் 20 ஆகஸ்ட் வரை) டிஆர்பி விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதில் வழக்கம்போல ஒட்டுமொத்த டிஆர்பியில் சன் டிவி முதலிடத்தை பிடித்திருக்கிறது. இருப்பினும், சீரியல்களுக்கான லிஸ்டில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மேலும் 10.4 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ள 'பாரதி கண்ணம்மா' சன் டிவியின் 'ரோஜா' சீரியலை பின்னுக்கு தள்ளியுள்ளது.
டிஆர்பி பின்னடைவை சந்தித்து 2ம் இடத்தில் உள்ள ரோஜா சீரியல் 10.25 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் இந்த இரண்டு சீரியல்களுக்கு இடையான புள்ளி வித்தியாசம் 0.15 ஆக உள்ளது. இது இந்த முதலிடத்திற்கான போட்டி இன்னும் அதிகரிக்கும் என்பதையே காட்டுகிறது. எனவே அடுத்தடுத்த வாரங்களில் எந்த சீரியல் முதலிடத்திற்கு வரவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சீரியல்களுக்கான டிஆர்பி பட்டியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 3ம் இடத்தையும், கண்ணான கண்ணே 4ம் இடத்தையும், பாக்கியலட்சுமி, 5ம் இடத்தையும் பெற்றுள்ளன.