Tamil serial TRP Rating in tamil: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் தங்களுடைய ஆதாரவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அதிக வரவேற்பை அளித்து வருகின்றனர். இதில், மக்கள் அதிகம் ரசிக்கும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பி விபரங்கள் வராந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரத்திற்கான (11 டிசம்பர் முதல் 17 டிசம்பர் வரை) டிஆர்பி விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதில் வழக்கம்போல ஒட்டுமொத்த டிஆர்பியில் சன் டிவி முதலிடத்தை பிடித்திருக்கிறது. விஜய் டிவி இரண்டாம் இடத்தையும், ஜீ தமிழ் மற்றும் கேடிவி மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தையும், விஜய் சூப்பர் 5ம் இடத்தையும் பிடித்துள்ளன.

டிவி சீரியலை பொறுத்தவரை, கடந்த வாரம் 11.12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சன்டிவியின் கயல் சீரியல் இந்த வாரமும் (11.21 புள்ளிகளுடன்) முதலிடத்தை பிடித்துள்ளது. இதேபோல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த வானத்தைப் போல மற்றும் சுந்தரி சீரியல்கள், விஜய் டிவி சீரியல்களால் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டு மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளன.
இதில், சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய மூன்று சீரியல்களும் 11.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. 5ம் இடத்தை ‘ரோஜா’ சீரியல் பிடித்துள்ளது.
ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 5.7 புள்ளிகளுடன் விஜய் டிவியின் பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“