சீரியல் டிஆர்பி ரேட்டிங் : ரோஜாவை வீழ்த்தி முதலிடம் பிடித்த புதிய சீரியல்

Tamil Serial TRP : தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி கண்ணான கண்ணே சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.

Tamil Serial TRP Rating Update : திரைப்படங்களை விட தற்போது சீரியலகளுக்கு ரசிகர்கள் அதிக முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். இதை பயன்படுத்திக்கொள்ள தொலைக்காட்சிகளும் புதிய சீரியல்களை களமிறங்கிவருகின்றன. மேலும பழைய சீரியல்கள சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறனர். இதில் என்னதான் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கின் அடிப்படையில் தான் எந்த சீரியல் வரவேற்பை பெறுகிறது என்பது தெரியவரும்.

அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களே தொடர்ந்து அதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த இரு தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் மாறி மாறி முதலிடம் பிடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவி சீரியலே முதலிடம் பிடித்துள்ளது. ஆனால் இதில் புதிதாக ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மட்டுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடங்களுக்குள் வந்துகொண்டிருந்தது. ஆனால் தற்போது ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி கண்ணான கண்னே சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த வாரம் நடைபெற்ற யுவா திருமணம்.  யுவாவுக்கு யாருடன் திருமணம் நடைபெறும் என பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருந்ததே இந்த சீரியல் டிஆபி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுவரை டாப் 5 லிஸ்டில் கூட இல்லாமல் இருந்த கண்ணான கண்ணே சீரியல் தற்போது முதலிடம் பிடித்து இருப்பதற்கு பாராட்டு குவிந்து வருகிறது. இது தொடர்பாக இந்த சீரியலில் ப்ரீத்தியாக நடித்து வரும் அக்ஷிதா ரசிகர்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது கண்ணான கண்கே சீரியலுக்கு 11.08 புள்ளிகள் கிடைத்து இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ரோஜா சீரியலும், மூன்றாவது இடத்தில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலும் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial trp rating kannana kanne serial top listed

Next Story
Roja Serial : அனுவை கடத்தும் அர்ஜூன் : டைகர் மாணிக்கம் கண்டுபிடிப்பாரா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com