கண்ணம்மா, பாக்யாவுக்கு டாப் 5-ல் இடமில்லை: அடிச்சுத் தூக்கும் சன் டிவி

Television TRP Rating : தற்போது வெளியாகியுள்ள தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரயல்களுக்கு இடம் கிடைக்கவில்லை

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தியேட்டர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் கவனம் டிவி சீரியல் பக்கம் திரும்பியுள்ளது. இதுவரை சீரியல் பார்க்காத நபர்கள் கூட இந்த ஊரடங்கு நேரத்தில் சீரியல் ரசிகர்களாக மாறியுள்ளனர்.

இதில் சீரியல் ரசிகர்களை கவர தொலைக்காட்சி சேனல்களும் புதிய முயற்சிகளை கையாண்டு வருகின்றனர்.ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில சீரயல்ககள் முதல் எபிசோடுகளில் இருந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், நேரத்தை கடத்த இரண்டு சீரியல்களை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை மற்ற சேனல்களில் இந்த நிலை இருந்தாலும், சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எவ்வித நிறுத்தமும் இன்றி வழக்கம் போல் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு ரசிகர்களும் பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரிப்போர்ட் இதற்கு சான்றாக உளளது. இந்த டிஆர்பி ரே்டிங்கில் முதல் 5 இடங்களில் 4 இடங்களை சன்டிவி பெற்றுள்ளது. இதில் 4-வது இடத்தில் மட்டும் விஜய் டிவியின் மூக்குத்தி அம்மன் படம் இடம் பிடித்துள்ளது. இதில் அதிக ரசிகர்ளை பெற்றுள்ள சன்டிவியின் ரோஜா சீரியலுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

ஆனால் ஹிட் சீரியல்களை கொடுக்கும் சேனல்களில் ஒன்றான விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இந்த டிஆர்பி ரேட்டிங்கில் இடம் கிடைக்கவில்லை என்பது விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமான விஜய் டிவியின் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல் நிறுத்தப்பட்ட நிலையில், பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இரண்டு சீரியல்களையும் இணைத்து மகாசஙகமம் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியல் வழங்கம் போல ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால் இந்த டிஆர்பி ரேட்டிங்கில் இதில் ஒரு சீரியல் கூட இடம்பெறாதது அந்த சீரியல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது. இதில் கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் லிட் லிஸ்டில் இருந்த பாரதி கண்ணம்மாவை வீழ்த்தி பாக்கியலட்சுமி சீரியல் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial trp rating last week suntv aggression 4 place from top five

Next Story
மர்லின் மன்றோவுக்கு டஃப் கொடுத்த சீரியல் நடிகை… கெட்டப் எல்லாம் பலமா இருக்கே!Sun TV serial Tamil News: Nayagi serial actress vidhya pradeep new look as merlin mandro
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com