Advertisment

Tamil Serial TRP Rating : சறுக்கிய எதிர்நீச்சல்... முன்னேறிய சிறகடிக்க ஆசை: இந்த வார டி.ஆர்.பி

தமிழ் சீரியல்களில் நடப்பு ஆண்டின் 43-வது வாரத்திற்காக சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Serial TRP Ratin

தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்

இன்றைய காலக்கட்டத்தில் இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சீரியல்கள். இதை புரிந்துகொண்டுள்ள சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கி வந்தாலும், ரசிகர்களின் ஆதரவை பொறுத்தே சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் அமைகிறது. இதனிடையே நடப்பு ஆண்டின் 43-வது வாரத்திற்காக சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் சன் டிவி சீரியல்களே வழக்கம்போல் முன்னணியில் உள்ளன.

Advertisment

கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த வானத்தைப்போல சீரியல், 11.44 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் 2-வது இடத்தில் இருந்த கயல் சீரியல் இந்த வாரம், 10.58 புள்ளிகளுடன் மீண்டும் 2-வது இடத்தை தக்க வைத்துள்ளது. சன்டிவியின் புதிய சீரியலான சிங்கப்பெண்ணே கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 10.41 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த வாரத்தில் 5-வது இடத்தில் இருந்த சன்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் தற்போது ஏற்றம் கண்டு 10.38 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்த சுந்தரி சீரியல் சற்று சறுக்கலை சந்தித்து 9.91 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் 6-வது இடத்தில் இனியா சீரியல் 8.10 புள்ளிகளுடன் 6-வது இடத்தை தக்கவைத்துள்ளது.

கடந்த வாரம் 9-வது இடத்தில் இருந்த ஆனந்த ராகம் சீரியல் இந்த வாரம் சற்று ஏற்றம் கண்டு 7.50 புள்ளிகள் பெற்று 7-வது இடத்திலும், கடந்த வாரம் 10-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 7.04 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல் 6.79 புள்ளிகளுடன் இந்த வாரம் 9-வது இடத்திலும், கடந்த வாரம் 7-வது இடத்தில் இருந்த புதிய சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 6.65 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment