Advertisment

மீண்டும் முதலிடம் பிடித்த எதிர்நீச்சல்... டஃப் கொடுக்கும் சிறகடிக்க ஆசை : இந்த வார டி.ஆர்.பி

2024-ம் ஆண்டின் 6-வது வாரத்தில் தமிழ் சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Ethirneechal Siragadikka Aasai

எதிர்நீச்சல் - சிறகடிக்க ஆசை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்ப்பின் காரணமாக, அவ்வப்போது புதிய சீரியல்கள் களமிறங்கி வருகின்றன. ஆனாலும் மக்கள் மத்தியில் சீரியல்கள் எவ்வாறு வரவேற்பை பெறுகின்றன என்பது சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

Advertisment

அந்த வகையில் இந்த வாரத்திற்கான சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து பார்ப்போம்.

சன்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் எதிர்நீச்சல் சில வாரங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறியதால், கதை பெரும் திருப்பத்தை கண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

சன்டிவியின் கயல் சீரியல், இந்த வாரம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், மீனா குமாரி, அபினவ்யா, அவினாஷ் அசோக் மற்றும் முத்துராமன் ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். 3-வது இடத்தில் சுந்தரி பார்ட் 2 சீரியல் உள்ளது. கேப்ரியல்லா செல்லஸின் சிறப்பான நடிப்பில் வெளியாகி வரும் சுந்தரி சீரியலில், சுந்தரி சவால்களை சந்தித்து வருகிறார்.

கடந்த வாரத்தைப் போலவே, ‘வானத்தைப் போலசீரியல் தனது 4-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சந்தியா மற்றும் சின்ராசுவின் புதிய தொடக்கத்தின் நிகழ்வு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்ராசுவுக்கும் அவரது சகோதரி துளசிக்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பைச் சுற்றியே கதைக்களம் நகர்கிறது.

சமீபத்திய டிஆர்பி தரவரிசையிலும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை5-வது இடத்தைப் பிடித்துள்ளது. முத்துக்குமார் மற்றும் மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த சீரியலின் கதை. முத்து தனது கடந்தகால பிரச்சனையால் கோபமடைந்த தாயுடன் கூட வாக்குவாதம் செய்கிறார். அவனிடம் கொஞ்சம் அன்பும் பாசமும் காட்டுபவர்கள் அவனை வளர்த்த அப்பாவும் பாட்டியும்தான்.

மறுபுறம், மீனா (கோமதி பிரியா) குடும்பம் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இதனால் முத்து மற்றும் மீனாவின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை மீதி கதை ஆராய்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment