Advertisment

வீழ்ச்சிப் பாதையில் சன். டி.வி சீரியல்கள் : அதிரடியாக முன்னேறிய விஜய் டி.வி. சீரியல்கள் : டி.ஆர்.பியில் அதிரடி மாற்றம்

கடந்த வாரத்தை விட இந்த வாரம் எதிர்நீச்சல் சீரியல், டி.ஆர்.பி புள்ளிகளை அதிகம் பெற்றதை தொடர்ந்து. 10.4 புள்ளிகளுடன் மீண்டும முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

author-image
WebDesk
New Update
Ethirneechal Siraga Singa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடப்பு ஆண்டின் 7-வது வாரத்தில் தமிழ் சின்னத்திரை சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து பார்ப்போம்.

Advertisment

சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்ப்பின் காரணமாகஅவ்வப்போது புதிய சீரியல்கள் களமிறங்கி வருகின்றன. ஆனாலும் மக்கள் மத்தியில் சீரியல்கள் எவ்வாறு வரவேற்பை பெறுகின்றன என்பது சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த வாரத்திற்காக சீரியல் டி.ஆர்.பி.ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் எதிர்நீச்சல் சீரியல்டி.ஆர்.பி புள்ளிகளை அதிகம் பெற்றதை தொடர்ந்து. 10.4 புள்ளிகளுடன் மீண்டும முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக இதுவரை முதலிடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல் 9.67 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த வாரம் வரை முன்னணி இடங்களை சன்டிவி சீரியல்களே ஆக்கிரமித்து வந்த நிலையில், தற்போது நிலை மாறி, விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 9.55 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. முத்து குறித்து மீனா புரிந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்புடன் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சைத்ரா ரெட்டி நடித்து வருமு் கயல் சீரியல் இந்த பட்டியலில் 9.38 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள வானத்தைபோல சீரியல், 9.29 புள்ளிகளுடன் இந்த வாரம்5-வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் விஜய் டிவியின் மற்றொரு முக்கிய சீரியலான பாக்கயலட்சுமி, சீரயிலில், எழில் கணேஷ் இருவரில் யார் அமிர்தாவின் கணவன் என்பதில் பெரிய மோதல் ஏற்பட்டுள்ளதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீரியல், 8.92 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

ஆல்யா மாசனா நடித்து வரும் இனியா சீரியல், 8.43 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், கடந்த வாரம் டாப்பில் இருந்த சுந்தரி சீரியல் 7.81 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரயில் 6.49 புள்ளிகளுடன் 9-வது இடத்தையும், விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் 6.24 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளது. இதுவரை சன்டிவி சீரியல்களே ஆக்கிரமித்து வந்த டி.ஆர்,பி ரேட்டிங் பட்டியலில், தற்போது விஜய் டிவி சீரயில்கள் முன்னேற தொடங்கியுள்ளன.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment