Advertisment

டாப் 10-ல் ஜீ தமிழ் சீரியல்... டி.ஆர்.பி பட்டியலை ஆக்கிரமித்த சன் டி.வி : விஜய் டி.வி சீரியல்கள் நிலை என்ன?

தமிழ் சின்னத்திரை சீரியல்களின் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Serial TRB Karthigai

சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்ப்பின் காரணமாகஅவ்வப்போது புதிய சீரியல்கள் களமிறங்கி வருகின்றன. ஆனாலும் மக்கள் மத்தியில் சீரியல்கள் எவ்வாறு வரவேற்பை பெறுகின்றன என்பது சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

Advertisment

அந்த வகையில் இந்த வாரத்திற்காக சீரியல் டி.ஆர்.பி.ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் எதிர்நீச்சல் சீரியல், டி.ஆர்.பி புள்ளிகளை அதிகம் பெற்றிருந்தாலும், வழக்கம்போல் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தை பெற்று வலுவான நிலையில், உள்ளது. அதேபோல் முதல் 5 இடங்களை சன் டி.வி சீரியல்களே ஆக்கிரமித்துள்ளன.

அதன்படி 11.10 டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுள்ள சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்திலும், 10.83 டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுள்ள கயல் சீரியல் 2-வது இடத்திலும், 10.43 டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுள்ள வானத்தைபோல சீரியல் 3-வது இடத்திலும்,  10.39 டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுள்ள எதிர்நீச்சல் சீரியல் 4-வது இடத்திலும்,  8.99 புள்ளிகளுடன் சுந்தரி சீரியல் 5-வது இடத்திலும் உள்ளது.

விஜய் டிவியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல், 8.73 டி.ஆர்,பி புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. சன் டி.வியின் இனியா சீரியல் 8.25 டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று 7-வது இடத்திலும், விஜய் டிவியில் கடந்த வாரம் மகா சங்கமமாக ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் – பாக்கியலட்சுமி சீரியல்கள் 7.63 புள்ளிகளை பெற்று 8-வது இடத்திலும் உள்ளது.

சன்டிவியின் ஆனந்த ராகம் சீரியல் 6.35 புள்ளிகளை பெற்று 9-வது இடத்திலும், சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு டாப் 10 டி.ஆர்.பி பட்டியலில் இணைந்துள்ள ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரயில் 5.88 புள்ளிகளை பெற்று 10-வது இடத்திலும் உள்ளது. வழக்கம்போல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்களே ஆக்கிரமித்திருந்தாலும், விஜய் டிவியின் முக்கிய சீரியல்கள் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment