Advertisment

நெருங்கி வரும் விஜய் டி.வி சீரியல்கள்... சறுக்கலை சந்தித்த சன் டி.வி : இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்!

நடப்பு ஆண்டின் 14-வது வாரத்திற்காக தமிழ் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Serial TRP Rating 2nd Week

சீரியல் டி.ஆர்.பி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில்கடந்த வாரத்தை விட இந்த வாரம் எதிர்பராத அளவிற்கு டி.ஆர்.பி ரேட்டிங்கில் சீரியல்கள் சறுக்கலை சந்தித்துள்ளன.

Advertisment

அதன்படி சன் டி.வியின் சிங்கப்பெண்ணே சீரியல்கடந்த வாரம் 10.15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் 9.46 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது, சைத்ரா ரெட்டி நடித்து வரும் கயல் சீரியல் இந்த வாரம்9.68 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், இந்த வாரமமும் அதே புள்ளிகளை தக்கவைத்துக்கொண்டு 2-வது இடத்தையும் தக்கவைத்துள்ளது.

எதிர்நீச்சல் சீரியல், கடந்த வாரம் 8.74 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் 8.67 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த வாரம் 7.80 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம், 8.19 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஸ்ரீகுமார் நடித்து வரும் வானத்தைபோல சீரியல் கடந்த வாரம் 8.09 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம், 7.73 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆல்யா மானசா நடித்து வரும் இனியா சீரியல் கடந்த 8.23 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 7.49 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

கேப்ரியல்லா நடித்து வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரம் 7.92 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் 7.18 புள்ளிகளுடன் அதே இடத்தில் உள்ளது. தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரம் 6.91 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்த நிலையில், இந்த வாரம் 7.02 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கந்த வாரம் 6.22 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 5.98 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது, சன்டிவியின் சின்னமருமகள் சீரியல் 5.45 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment