தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த பாரம் சுந்தரி உள்ளிட்ட சில சீரியல்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அந்த வகையில் நடப்பு ஆண்டின் 12-வது வாரத்திற்கான சீரியல் டி.ஆர்.பி.ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த வாரம் சன் டி.வியின் சிங்கப்பெண்ணே சீரியல், 10.77 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. சைத்ரா ரெட்டி நடித்து வரும் கயல் சீரியல் இந்த வாரம், 9.66 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. எதிர்நீச்சல் சீரியல்,9.33 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
ஸ்ரீகுமார் நடித்து வரும் வானத்தைபோல சீரியல் 8.48 புள்ளிகளுடன் டி.ஆர்.பி ரேட்டிங்கில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வரும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 8.23 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது. ஆல்யா மானசா நடித்து வரும் இனியா சீரியல் 8.23 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
கேப்ரியல்லா நடித்து வரும் சுந்தரி சீரியல் 7.91 புள்ளிகளுடன் 7-வது இடத்தை தக்கவைத்துள்ளது. விஜய் டிவியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாக்கியலட்சுமி சீரியல் 6.91 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளது. விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் 6.22 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 6.14 புள்ளிகளுடன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“