Advertisment

முன்னேற்றம் கண்ட எதிர்நீச்சல்... தொடரும் சன் டி.வி சீரியல்கள் ஆதிக்கம் : இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்

தமிழ் சீரியல்களின் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Tamil Serial TRP Rating

சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்தே மக்கள் எவ்வாறு சீரியலை ரசிக்கிறார்கள் என்பது தெரியவரும். அந்த வகையில் நடப்பு ஆண்டின் 8-வது வாரத்திற்கான சீரியல் டி.ஆர்.பி.ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அதன்படி இந்த வாரம் சன் டி.வியின் சிங்கப்பெண்ணே சீரியல்11.36 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. சைத்ரா ரெட்டி நடித்து வரும் கயல் மற்றும் எதிர்நீச்சல் ஆகிய இரு சீரியல்களும்,  10.33 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வானத்தைபோல சீரியல் 9.56 புள்ளிகளுடன் டி.ஆர்.பி ரேட்டிங்கில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.  

கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த இனியா சீரியல், இந்த வாரம், 8.96 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த சுந்தரி சீரியல் 8.34 புள்ளிகளுடன் 5-வது இடத்தை தக்கவைத்துள்ளது. விஜய் டிவியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 8.02 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

கோபி அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 7.32 புள்ளிகளுடன் 7-வது இடத்தையும்பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 6.50 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் பிடித்துள்ளது. அஹா கல்யாணம் சீரியல் 5.62 புள்ளிகளுடன் 9-வது இடத்தையும்,  ஆனந்த ராகம் சீரியல் 5.32 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment