Advertisment

Tamil Serial TRP Rating : முன்னேறிய வானத்தைப்போல... சறுக்கிய எதிர்நீச்சல் : விஜய் டிவி சீரியல் நிலை என்ன?

நகர்புறத்தில் விஜய் டிவி சீரியல்களும், கிராமபுறங்களில் சன்டிவி சீரியல்களும் ஆக்கிரமித்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Tamil Serial TRB Ratiin

தமிழ் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்

இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சீரியல்கள். இதை புரிந்துகொண்டுள்ள சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கி வரும் நிலையில், ஏற்கனவே பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களின் திரைக்கதையை மேலும் பரபரப்பாக்கி வருகின்றனர். சேனல்கள் என்னதான் முயற்சி மேற்கொண்டாலும் ரசிகர்களின் ஆதரவை பொறுத்தே சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் அமைகிறது. 

Advertisment

இதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் உள்ளது. இதில் நகர்புறத்தில் விஜய் டிவி சீரியல்களும், கிராமபுறங்களில் சன்டிவி சீரியல்களும் ஆக்கிரமித்து வருகிறது. இதனிடையே நடப்பு ஆண்டின் 42-வது வாரத்திற்காக சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் சன் டிவி சீரியல்களே வழக்கம்போல் முன்னணியில் உள்ளன.

கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த சன்டிவியின் வானத்தை போல சீரியல் இந்த வாரம் 10.40 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த சன்டிவியின் கயல் சீரியல் 10.14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்த சுந்தரி சீரியல் 9.75 புள்ளிகளுடன் அதே 33-வது இடத்தில் நீடிக்கிறது.

கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த சன்டிவியின் புதிய சீரியலான சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 9.62 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும்,  கடந்த வாரம் 2-வது இடத்தில் இருந்த சன்டிவியின் முக்கிய சீரியலான எதிர்நீச்சல் இந்த வாரம் 9.55 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் 6-வது இடத்தில் இருந்த இனியா 8.01 புள்ளிகளுன் அதே இடத்தை தக்கவைத்துள்ளது.

கடந்த வாரம் 7-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 7.25 புள்ளிகள் பெற்று மீண்டும் அதே இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல், 7.19 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், 9வது இடத்தில் இருந்த சன்டிவியின் ஆனந்த ராகம் சீரியல் 7.16 புள்ளிகளுடன் அதே இடத்திலும், 10-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 6.87 புள்ளிகளுடன் அதே இடத்திலும் நீடிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment