Advertisment

மீண்டும் முதலிடத்தில் சன் டி.வி... டாப் 10-ல் ஜீ தமிழ் சீரியல் : விஜய் டி.வி சீரியல்கள் நிலை என்ன?

2024-ம் ஆண்டின் 8-வது வாரத்தில் தமிழ் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Sun tv and Vijay Tv Serial YTRP

சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்தே மக்கள் எவ்வாறு சீரியலை ரசிக்கிறார்கள் என்பது தெரியவரும். அந்த வகையில் நடப்பு ஆண்டின் 8-வது வாரத்திற்கான சீரியல் டி.ஆர்.பி.ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அதன்படி இந்த வாரம் சன் டி.வியின் சிங்கப்பெண்ணே சீரியல், 11.50 ரேட்டிங்குடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. சைத்ரா ரெட்டி நடித்து வரும் கயல் சீரியல்,  10.60 ரேட்டிங்குடன் 2-வது இடத்திலும்,  வானத்தைபோல சீரியல் 10.56 புள்ளிகளுடன் டி.ஆர்.பி ரேட்டிங்கில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.  

கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருந்தாலும், 10.39 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த சுந்தரி சீரியல் 8.65 புள்ளிகளுடன் 5-வது இடத்தை தக்கவைத்துள்ளது. ஆல்யா மானசா நாயகியாக நடித்து வரும் இனியா சீரியல், கடந்த வாரம் 7-வது இடத்தில் இருந்தாலும், இந்த வாரம் 8.56 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

விஜய் டிவியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 7.41 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது. கோபி அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 7.09 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 6.29 புள்ளிகளுடன் 9-வது இடத்தையும் பிடித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பெறாத ஜீ தமிழ் சீரியல்களில் இந்த வாரம் கார்த்திகை தீபம், 5.95 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் ஆஹா கல்யாணம், மற்றும் ஆனந்த ராகம் சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம்பெறவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment