Advertisment

வரவேற்பு இல்லாத எதிர்நீச்சல்... முதலிடத்தில் புதிய சீரியல் : விஜய் டிவி நிலை என்ன?

2023-ம் ஆண்டின் 49-வது வாரத்தில் டிவி சீரியல்களில் டி.ஆர்பி ரேட்டிங் குறித்து இப்போது பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Serial TRP Rating

தமிழ் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்

இன்றைய காலக்கட்ட மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது டிவி சீரியல்கள். இதன் காரணமாக அவ்வப்போது புதிய சீரியல்கள் வருவதும் பழைய சீரியல்கள் முடிவதும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை வைத்தே சீரியல்கள் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறது என்பதை கணிக்கிறார்கள.

Advertisment

அந்த வகையில் இந்த ஆண்டின் 49-வது வாரத்தில் டிவி சீரியல்களில் டி.ஆர்பி ரேட்டிங் குறித்து இப்போது பார்க்கலாம்

இந்த பட்டியலில் சன்டிவியின் சிங்கப்பெண்ணே சீரலியல் ஒளிபரப்பாக தொடங்கியதில் இருந்தே முதலிடத்தை பிடித்து வரும் நிலையில், இந்த வாரமும் 10.79 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. ரசிகர்கள் மத்தியில் தொடக்கம் முதலே நல்ல வரவேற்பை பெற்று வரும் கயல் சீரியல் 10.10 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், சுந்தரி 2 சீரியல் 9.27 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

தொடக்கம் முதலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து போனதில் இருந்து, டி,ஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்து வரும் நிலையில், இந்த வாரம் 9.18 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. வானத்தைபோல சீரியல் 8.88 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், இனியா சீரியல் 8.05 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளது.

ஆனந்தராகம் சீரியல் 7.37 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ள நிலையில், விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 7.21 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், பாக்யலட்சுமி சீரியல் 7.03 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ஆஹா கல்யாணம் சீரியல் 6.61 புள்ளிகளை பெற்று 10-வது இடத்திலும் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment