Advertisment

சறுக்கிய சிறகடிக்க ஆசை, சிங்கப்பெண்ணே: அப்போ முதலிடத்தில் எந்த சீரியல்? இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்!

தமிழ் சீரியல்களின் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Sun tv and Vijay Tv Serial YTRP
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், அதிகமாக பாக்கப்படும் அவற்றின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொருத்தே மதிப்பிடப்படுகின்ற. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து பார்ப்போம்.

Advertisment

முதல் இடத்தில் கயல் சிங்க பெண்ணே 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் 3-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம், முதலிடத்தை பிடித்துள்ளது.

2-வது இடத்தில் சிங்கப்பெண்ணெ

ஒளிபரப்பாக தொடங்கியதில் இருந்து முதலிடத்தை பிடித்திருந்த சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் சற்று சறுக்கலை சந்தித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

3-வது இடத்தில் வானத்தைப்போல

கடந்த சில வாரங்களாக 5-வது இடத்தில் இருந்து வந்த வானத்தைப்போல சீரியல் இந்த வாரம், 3-வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளது.

4-வது இடத்தில் மருமகள்

சன்டிவியில் புதிதாக தொடங்கிய மருமகள் சீரியல் முதல் வாரமே முன்னணியில் இருந்த நிலையில், இந்த வாரம் சற்று இறங்கி 4-வது இடத்தை பிடித்துள்ளது,

5 வது இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை

கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சீரியல் இந்த வாரம் சற்று வீழ்ச்சியை சந்தித்து 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

6 வது இடத்தில் மல்லி

சன் டி.வியில் புதிதாக தொடங்கப்பட்ட மல்லி சீரியல் கடந்த வாரம் 6-வது இடத்தை பிடித்திருந்த நிலையில்இந்த வாரம், 6-வது இடத்தை தக்கவைத்துள்ளது,

7 வது இடத்தில் பாக்கியலட்சுமி

கடந்த வாரம் 7-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 7-வது இடத்தை தக்கவைத்துள்ளது.

8 வது இடத்தில் சுந்தரி 2

கடந்த வாரம் 9-வது இடத்தில் இருந்த சன். டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியல்இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளது.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலும் 8-வது இடத்தில் உள்ளது.

9 வது இடத்தில் கார்த்திகை தீபம்

அவ்வப்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பிடித்து வரும் ஜீ தமிழ் சீரியல்களில் இந்த வாரம் கார்த்திகை தீபம் 9-வது இடத்தை பிடித்துள்ளது.

10 வது இடத்தில் ராமாயணம்

சன்டிவியில் புதிதாக தொடங்கிய ராமாயணம் சீரியல் தற்போது டி.ஆர்,பி ரேட்டிங்கில் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment