Advertisment

மாஸ் காட்டிய மருமகள்: க்ளாஸாக முன்னேறிய சிறகடிக்க ஆசை; இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்!

தமிழ் சீரியல்களின் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Serial TRP Rating

சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், அதிகமாக பாக்கப்படும் அவற்றின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொருத்தே மதிப்பிடப்படுகின்ற. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து பார்ப்போம்.

Advertisment

முதல் இடத்தில் சிங்க பெண்ணே 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்தது. அதேபோல் இந்த வாரமும் 9.26 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க தக்க வைத்துள்ளது.

2-வது இடத்தில் மருமகள்

சன் டிவியில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மருமகள் சீரியல் 8.55 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

3-வது இடத்தில் கயல்

கடந்த சில வாரங்களாக 2-வது இடத்தில் நீடித்து வந்த கயல் சீரியல் இந்த வாரம், 8.53 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

4-வது இடத்தில் சிறகடிக்க ஆசை

கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 7.89   புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை தக்கவைத்துள்ளது.

5 வது இடத்தை பிடித்த வானத்தைப்போல

கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த சன்டிவியின் வானத்தைப் போல சீரியல் இந்த வாரம் 7.68 புள்ளிகள் பெற்று அதே இடத்தை தக்கவைத்துள்ளது.

6 வது இடத்தில் மல்லி

சன் டி.வியில் புதிதாக தொடங்கப்பட்ட மல்லி சீரியல் கடந்த வாரம் 8-வது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம், 7.21 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

7 வது இடத்தில் பாக்கியலட்சுமி

கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.79 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

8 வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் 2 இந்த முறை 6.48  புள்ளிகளை பெற்று 8வது இடத்தை பிடித்துள்ளது.

9 வது இடத்தில் சுந்தரி 2

சன். டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியல்இந்த வாரம் 6.35 புள்ளிகளுடன் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

10 வது இடத்தில் ஆஹா கல்யாணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் இந்த வாரம்5.84 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தை பிடித்துள்ளது.

புதிதக தொடங்கப்பட்ட மருமகள் சீரியலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment