ரோஜாவுக்கு டஃப் கொடுக்கும் கண்ணம்மா: பாக்யா இந்த லிஸ்ட்லயே இல்லை!

Serial TRP Rating : தமிழ் சீரியலின் கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் ரோஜா மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

சின்னத்திரை சீரியல்களுக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால், தோலைக்காட்சி சேனல்கள் சீரியலகளில் வித்தியாசமான சில முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சீரயல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஹிட் சீரியல் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியுள்ளனர்.

அந்த வகையில் சன்டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் இரவு 9 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதே டைமில் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரு சீரியல்களும் கிட்டதட்ட ஒரே கதையம்சம் கொண்டதாக இருப்பதால், இரு சீரியலுக்கும் இடையே டிஆர்பி ரேட்டிங்கில் கடும் போட்டி நிலவி வந்தது. மேலும் தற்போது ஒரே டைமில் ஒளிபரப்பாகி வருவதால் இரு சீரியலுக்கும் இடையே உள்ள போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், சீரியல்களுக்காக கடந்த வார டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல் சன் டிவி ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த லிஸ்டில், டாப் 5 ல் நான்கு இடங்களை சன் டிவி கைப்பற்றி உள்ளது. இதில் முதலிடத்தில் கடந்த வாரம் சன்டிவியில் ஒளிபரப்பான ஜில்லா படம் பெற்று இருக்கிறது.

அடுத்து டிஆர்பியில் இரண்டாம் இடத்தில் சன்டிவியின் ரோஜா சீரியல் உள்ளது. இந்த தொடரில் கடந்த சில வாரங்களாக வழக்கு மற்றும் திருப்பங்கள் ரசிகர்களை பரபரப்பாகவே வைத்திருக்கிறது. இந்த பட்டியலில், மூன்றாம் இடத்தில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் உள்ளது. மகள்களின் பிறந்தநாள் பார்ட்டியில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சந்தித்துக் கொள்வது போல கடந்த வாரம் காட்டப்பட்டதால் அதிகம் பரபரப்பாக இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது. நான்காம் இடத்தை சன் டிவியின் காஞ்சனா படமும், ஐந்தாவது இடத்தை வானத்தைப் போல சீரியல் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial trp rating update roja and bharathi kannamama competition

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com