New Update
/indian-express-tamil/media/media_files/bxoqMGPigtVs4IHDPzeV.jpg)
சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்
தமிழ் சீரியல்களில் டாப் 5 டி.ஆர்.பி ரேட்டிங் பெற்றுள்ள சீரியல்கள் பட்டியல் குறித்து பார்ப்போம்.
சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்
சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், அதிகமாக பாக்கப்படும் அவற்றின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொருத்தே மதிப்பிடப்படுகின்ற. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து பார்ப்போம்.
முதல் இடத்தில் சிங்க பெண்ணே
ஒளிபரப்பாக தொடங்கியதில் இருந்து முதலிடத்தை பிடித்திருந்த சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் கடந்த வாரம் சற்று சறுக்கலை சந்தித்து இரண்டாவது இடத்தை பிடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது,
2-வது இடத்தில் சிங்கப்பெண்ணெ
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
3-வது இடத்தில் மருமகள்
சன்டிவியில் புதிதாக தொடங்கிய மருமகள் சீரியல் முதல் வாரமே முன்னணியில் இருந்த நிலையில், கடந்த வாரம் 4-வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளது,
4-வது இடத்தில் வானத்தைப்போல
கடந்த சில வாரங்களாக 5-வது இடத்தில் இருந்து வந்த வானத்தைப்போல சீரியல் கடந்த வாரம், 3-வது இடத்திற்கு ஏற்றம் கண்ட நிலையில், இந்த வாரம் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
5 வது இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை
கடந்த வாரத்திற்கு முன்பு 4-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் சற்று வீழ்ச்சியை சந்தித்து 5-வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், இந்த வாரம் அதே இடத்தில் நீடிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.