scorecardresearch

பணம் வாங்கிக் கொண்டு யாரை ஏமாற்றினேன்? தர்ஷா கண்ணீர் வீடியோ

Tamil Serial Actress Dharsh Gupta : சீரியல் நடிகை தர்ஷா குப்தா பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகர் எழுந்துள்ளது.

பணம் வாங்கிக் கொண்டு யாரை ஏமாற்றினேன்? தர்ஷா கண்ணீர் வீடியோ

Tamil Serial Update Dharsha Gupta : தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ப்ரமோஷன் செய்வதாக கூறி பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக சீரியல் நடிகை தர்ஷா குப்தா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நன்மைகள் நிகழும் அதே வேளையில் அதற்கு சமமான கெட்டதும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் சமூக வலைதளங்களை சாதாரன மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பல பிரபலங்கள் பயன்படுத்தி வரும் நிலையில், பிரபலங்கள் பலரையும் பின்பற்ற லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். அந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நோக்கில் சில நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்பட்ங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதில் சினிமா நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகள் தான் சமூக வலைதளங்களில் பெரிய ரவுண்ட் வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நடிக்கைள் தங்களது ரசிகர்களையும், தங்களை சமூக வலைதளங்களில் ஃபாலோ பண்ணும் இளைஞர்களையும் குஷியாக்கும் நோக்கத்தில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தங்களது வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.  

அந்த வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் தர்ஷா குப்தா. ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடித்த  இவர் தற்போது சன் தொலைகாட்சியில் “மின்னலே” விஜய் தொலைக்காட்சியில், “செந்தூரப்பூவே” ஆகிய தொடர்களிலும், நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியின் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் வெளியேறினார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் தர்ஷா குப்தா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக லாக்டுவுனுக்கு முன்பாக 25 ஆயிரத்திற்கும் குறைவான ஃபாலோவர்களை பெற்றிருந்த அவர், தற்போது 10 லட்சத்திற்கு மேலானஃபாலோவர்களை வைத்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும், அவரது கவர்ச்சிபோட்டோ ஷூட்டும் தான்.

இதனால் வலைதளங்களில் பெரும் பிரபலமான இவர் மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோமோஷன் செய்வதாக கூறி பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஒரு சிலர் இவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் தர்ஷா குப்தா இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


அந்த வீடியோவில்,, நான் யாருடைய பணத்தையும் ஏமாற்றவில்லை, எனனிடம் சிலர் தங்களுடைய புடவை, கம்மல் போன்றவற்றை விளம்பரம் செய்ய சொல்லி கேட்பார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் நேரத்தில் என்னால் ப்ரோமோஷன் வீடியோ போட முடியாது என்பதால் நான் என் விருப்பத்திற்கு தான் வீடியோ போடுவேன். அதனால் நான் பணம் வாங்காமல் இலவசமாக தான் செய்து கொடுத்தேன். உண்மை தெரியாமல் யாரை அசிங்கமாக பேச வேண்டாம் என்று கண்ணீர் மல்க கூறிளளார்.

சீரியல் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற இவர் தற்போது திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி .இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial update actress dharsha gupta indictment