/tamil-ie/media/media_files/uploads/2021/03/Egavelli.jpg)
Tamil Serial Sillunu Oru Kathal Serial Egavalli : கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் நடிக்க நடிகை ஏகவள்ளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் சீரியலுக்கு பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று கலர்ஸ் டிவி. குறுகிற காலத்தில் தமிழில் பெரும் பிரபலமாக இந்த டிவியில் தொடக்கத்தில் இந்தி சீரியல் டப்பிங் செய்து ஒளிபரப்பி வந்தனர். அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது நேரடி தமிழ் சீரியல்கள் ஒளிபரப்பு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த டிவயில் ஒளிப்பரப்பாகும் நேரடி தமிழ் சீரியல்களுக்கும் வரவேற்பு அதிகமாகவே உள்ளது.
இதனை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் கலர்ஸ் டிவியின் ஹிட் சீரியலான மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் ஆகிய இரண்டு சீரியல்களையும் இணைத்து மகாசங்கமம் ஒளிபரப்பபாகி மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சீரியல் சில்லுனு ஒரு காதல். சமீர் அகமது, தர்ஷினி கவுடா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில், அகிலா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஏகவள்ளி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
பிரபல சீரியல் நடிகை யமுனா சின்னத்துரையின் சகோதரியான இவர், அபூர்வராகம், கேளடி கண்மனி, என் இனிய தோழி, சபிதா என்கிற சபாபதி ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இதில் கேளடி கண்மனி சீரியல்ல அவர் வில்லியாக நடித்து வரும் நிலையில், தான் சில்லுனு ஒரு காதல் சீரியலில் நடிக்க தொடங்கி இருப்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.