வீடியோ: புல்லட்டில் உலாவரும் சீரியல் நடிகை… என்னா கெத்து!

Tamil Serial Update : சீரியல் நடிகை ஒருவர் சேலையுடன் புல்லட்டில் வலம் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay TV Aranmanikkili Serial Actress Pragathi Bike Driving : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனைக்கிளி சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரகதி புல்லட்டில் வலம்வரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. அதனைத் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வந்த அவர் தமிழில் கடைசியாக 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், இரு முறை ஆந்திர அரசின் உயரிய விருதான நந்தி விருது பெற்றுள்ளார்.

தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு சன்டிவியில் ஒளிபரப்பான பெண் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனைக்கிளி சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.  சீரியல் மட்டுமல்லாது உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தி வரும், நடிகை பிரகதி, தான் உடற்பயிற்சி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இதில் சமீபத்தில் இவர், தனது மகனுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

அந்த வகையில் தற்போது நடிகை பிரகதி மீண்டும் தனது தனித்திறமையை நிரூபிக்கும் வகையில், சேலை கட்டிக் கொண்டு புல்லட்டில் கம்பீரமாக வலம் வரும் தனது வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவுக்கு லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial update aranmanikili seria actress pragathi bike raid

Next Story
முதல் முறையாக சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி: புகழ் பேசிய வசனம் நீக்கம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com