Pandian Stores Baakiyalakshmi Magasangamam : சோகமாக இருக்கும் கண்ணனிடம் தனம் என்னாச்சு என கேட்கும் போது அழுது கொண்டே நம்ம வீட்டுக்கு போகலாம் அண்ணி என சொல்கிறான். ஆனால் தனம் நீ என்கிட்ட எதையோ மறைக்குற, என்ன்னு சொல்லுடா என கேட்க கண்ணன் ஏதோ சொல்ல வருகிறன். ஆனால் இடையில் பவரும் எழில், கண்ண்ணுக்கு குன்னக்குடி மற்றும் அண்ணன்களின் நியாபகம் வந்த்தாக கூறுகிறான். அண்ணன்களை எல்லாம் இவ்வளவு நாள் பார்க்காம இருந்ததே இல்லைன்னு சொன்னான். அதுக்கு தான் அழுகுறான் என சொல்லி சமாளிக்கிறான்.
கண்ணனும் கண்ணனும் அதையே சொல்லி சமாளிக்க, ரெண்டு நாள் தான, நிச்சயம் முடிச்சுட்டு கிளம்பிடலாம் என சமாதானம் சொல்கிறாள் தனம். அதன்பிறகு கண்ணனை தனியாக அழைத்து வரும் எழில், நீ வீட்டை நினைச்சு அழுகலைன்னு எனக்கு தெரியும். என சொல்லும்போது கண்ணன், எனக்கு ஐஸ்வர்யாவை அவ்வளவு பிடிக்கும். அவுங்க அம்மா, அப்பா இறந்த பிறகு எங்க வீட்ல தான் கொஞ்ச நாள் இருந்தா, நான் தான் அவளுக்கு ஆறுதல் சொல்லுவேன் என் சொல்கிறான்.
அப்போது எழில் நீ இப்போ கூட போய் அந்த பொண்ணு கிட்ட சொல்லுடா. என எழில் சொல்லும்போது, இல்லை, என்னை விட ஐஸ்வர்யாவுக்கு பிரசாந்த் தான் பொருத்தமா இருப்பான். அவன்கிட்ட எல்லாமே இருக்கு என கண்ணன் கூறுகிறான். இதற்கிடையே வெளியில் சென்ற அனைவரும் வந்துவிட பிரசாந்த் நிச்சயத்திற்கு கண்ணனுக்காக வாங்கி வந்த டிரெஸ்ஸை கொடுக்கிறான் ஆனால் கண்ணன் அதை வாங்க மறுக்க தனம் சொல்லியவுடன் வாங்கி கொள்கிறான்.
இதனை தொடர்ந்து எழில் ஜெனியிடம் செழியன் போன் பண்ணி பேசுனான என கேட்கிறான். அப்போது அவள் ஏதோ கடமைக்கு பேசுனான் என சொல்கிறான். அப்போது அங்கு வரும் பிரசாந்திடம் உங்க லவ் ஸ்டோரி பற்றி சொல்லுங்க என எழில் கேட்கும்போது, என்னை மாதிரி அவளுக்கும் அம்மா, அப்பா இல்லை. அப்புறம் அவள் ரொம்ப போல்ட்டான பொண்ணு. அதான் அவள் மேல லவ் வந்துருச்சு என சொல்கிறாள்.
இதற்கிடையே ஐஸ்வர்யாவிடம் வரும் கஸ்தூரி, உனக்கு என்ன பிரச்சனை. எதுக்கு இப்படி முகத்தை தூக்கி வைச்சு உட்கார்ந்து இருக்க என கேட்க, எனக்கு பிரஷாந்தை பிடிக்கலை. யார கேட்டு நீங்க இந்த கல்யாணத்தை முடிவு பண்ணீங்க என்கிறாள். அதற்கு கஸ்தூரி இதை விட உனக்கு எந்த சம்பந்தம் தேடி வரும். நல்ல அழகான பையன். இவ்வளோ சொத்து இருக்கு. வேற என்ன வேணும் என கேட்கிறாள். அப்போது எனக்கு அவனை பிடிக்கலை என ஐஸ்வர்யா சொல்லும் போது, அப்போ உனக்கு வேற யாரா பிடிச்சு இருக்கு என கேட்கிறாள்.
அப்போது அவள் கண்ணனை பிடித்திருக்கு என சொல்லும் போது, கோபப்படும் கஸ்தூரி, அவளை அடித்து அதெல்லாம் ஒரு குடும்பமா அந்த வீட்ல கல்யாணம் முடிச்சு மாளிகை கடைல பொட்டலம் மடிச்சு போட போறீயா என கேட்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா, ப்ளிஸ் சித்தி எனக்கு அவனை தான் பிடிச்சு இருக்கு என சொல்கிறாள். அப்போது கஸ்தூரி, உனக்கும் பிரசாந்த்க்கும் தான் கல்யாணம். என்கிட்ட சொன்ன மாதிரி வெளியே சொல்லிட்டு இருந்த அவ்வளவு தான் என சொல்லிவிட்டு வெளியே செல்கிறாள்.
இதற்கிடையெ தனத்திற்காக சூடு தண்ணீர் வைத்து ஒத்தடம் கொடுக்கும் பாக்யா, நீ சொன்ன பிசினஸ் பிளானை பற்றி ஜெனி செல்விகிட்ட சொன்னேன். சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க என சொல்லும்போது இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil