தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களுக்கு வரவேற்பு அதிகமாகி வருகிறது. அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்த பலரும் சீரியலுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லாம். இந்த சீரியல்களில் வரும் வரும் நாயகன் நாயகிக்கு கிடைக்கும் வரவேற்பை போல வில்லன் நடிகர் மற்றும் நடிகைகளை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருவதும் தற்போது அதிகமாகி வருகிறது இதில் இருந்தே சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
ரசிகர்களின் ரசனைகேற்ப சீரியல்கள் வழங்குவதில் முன்னணி தொலைக்காட்சிகளுக்கிடையே பெரும் போட்டியே நிலவி வருகிறது. இந்த போட்டியில் விஜய் டிவி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லாம். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் விஜய் டிவி சீரியலுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இதில் பாக்கியலட்சுமியாக சுசித்ராவும், அவரது கணவர் கோபியாக சதீஷ் நடித்து வருகின்றனர்.
இதில் பாக்கியலட்சுமி கோபி தம்பதிக்கு இரு மகன்கள் ஒரு மகள் என்ற அழகான குடும்பம் இருக்கும் நிலையில், கோபி தனது முன்னாள் காதலி ராதிகாவுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் கதை நகர்கிறது. இதனால் கோபி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ்க்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் ரசிகர் ஒருவர் ‘இந்த கோபி பையன பாத்தாதான் எரிச்சல் ஆகுது. நல்ல பொண்டாட்டி கிடெச்சி இருக்கு அதன் அவனுக்கு கொழுப்பு ‘ என்று கமன்ட் செய்து இருந்தார்.
இதனால் கோபமான சதீஷ் (கோபி) இதற்கு பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கடந்த சில நாட்களாக புரோமோவை பார்த்துவிட்டு பலரும் எனது இன்பாக்ஸில் வந்து மிகவும் வக்கிரமான வார்த்தைகளால் என்னை திட்டுகிறார்கள். தயவுசெய்து கேட்கிறேன், இது ஒரு சீரியல் என்பதை மறக்க வேண்டாம். என்னிடம் வந்து. மோசமாக பேசுவது எப்படி நியாயமாகும் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார்.
ஆனாலும் ரசிகர்களின் வக்கிரம் தொடர்ந்து வந்த நிலையில், மீண்டும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்ட அவர், “நான் புலம்பினேன். ஒப்பாரி வைத்தேன். ஆனால் நீங்கள் இவ்வளவு எனக்கு ஆதரவு தருவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. பலரும் எனக்காக என்று வார்த்தைகளை அனுப்பி உள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி என்று மனம்வருந்தி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோவை பார்த்த பலரும் சதீசுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil