Tamil Serial Baakiyalakshmi Serial Update : அவசர அவசரமாக ஓடிவரும் செல்வியிடம் என்னச்சு என்று கேட்க, மகளுக்கு துணி எடுக்க போகும்பொது அந்த கடையில் கோபியை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்ததாக சொல்கிறாள் அதை கேட்டு ஷாக் ஆகும் பாக்யா இனியா அப்பா அப்படியெல்லாம் செய்ய மாட்டாறு என்று சொல்கிறாள். ஆனாலும செல்வி, அவர் உன்னை ஏமாத்துராரு. துரோகம் பண்றாரு அக்கா. அவர் நல்லவர் இல்லை என சொல்கிறான். மேலும் கடைசியில் ஒரு பெண்ணுடன் கோபி சிரித்து சிரித்து பேசியதாகவும், அந்த பெண்ணுக்கு புடவை எடுத்து கொடுத்ததாகவும் சொல்கிறாள்.
ஆனால் இதை நம்ப மறுக்கும் பாக்யா இனியா அப்பா அப்படிலாம் இல்லை. என்னை தவிர வேற எந்த பொண்ணு கூடயும் பேச மாட்டாரு என கோபப்படுகிறாள். ஆனால் மீண்டும் மீண்டும் கோபியை பற்றி சொல்லும் செல்வி, நம்ம சாரை பற்றி உன்கிட்ட தப்பா சொன்னா எனக்கு என்ன கிடைக்க போகுது என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்றேன். நான் அவரை பார்த்தேன். என சொல்கிறாள்.
ஆனால் அதையும் பாக்யா நம்பாததால், நீயாச்சி உன் வாழ்கையாச்சி நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு செல்வி கிளம்புகிறாள். இதனிடையில் பூட்டிருக்கும் அமிர்தா வீட்டிற்கு வரும் எழில் பழை நினைவுகளை நினைத்துப்பார்க்கிறான். அதன்ப்பிறகு வீட்டில் பாக்யா மாமியார் மாமனாருடன் அமர்ந்திருக்க ஜெனி முதல் நாள் ஆபிஸ் முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறாள். அவளிடம் முதல் நாள் ஆபிஸில் நடந்தவற்றை விசாரித்திபின், பாக்யா, ஜெனி வேலைக்கு போறது எனக்கு ரொம்ப சந்தோசம் அத்தை. இப்படி தான் இருக்கணும் என சொல்கிறாள்.
அதற்கு ஈஸ்வரி செழியன் படிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிட்டான். ஆனா கோபிக்கு உன்னா கல்யாணம் பண்ணி வைச்சுட்டோம். இல்லன்னா அவனுக்கும் படிச்ச பொண்ணா கல்யாணம் பண்ணி வைச்சு இருப்போம் என்கிறாள். அதை கேட்டு பாக்யா சோகமாக எழுந்து செல்கிறாள். ஈஸ்வரியின் கணவர் நான் வாத்தியாரா இருந்ததுக்கு ஒரு டீச்சரை கல்யாணம் பண்ணிருக்கனும் ஆன உன்ன கட்டிக்கிட்டேன் என்று சொல்லி கிண்டல் செய்கிறார். அப்போது செல்வி கூறியதை பற்றி நினைத்து குழம்பி இருக்கிறாள்.
இதனிடையில் ஆபிஸ் முடித்து வரும் கோபி, ஹாலில் அனைவரும் விளையாடி அவர்களுடன் உட்காருகிறான். அப்போது செழியன் நான் ஈவ்னிங் ஆபிஸ் வந்தேன் உங்களை காணோம் என கேட்கும் போது, கோபி மீட்டிங் ஒன்னுக்கு போயிருந்தேன் என்கிறான். இதை கேட்டுக்கொண்டிருக்கும் பாக்யா, செல்வியும் இதே நேரம் தான சொன்னா என யோசிக்கிறாள். அதன்பிறகு இனியா புது பர்மிம்மா டாடி என கேட்கும் போது அதெல்லாம் எதுவும் என சொல்கிறான்.
அப்போது அவன் தண்ணீர் குடிக்க கிச்சன் வர்ற அவன் பர்மிம்மில் வித்தியாசம் தெரிவதை உணர்ந்து அதிர்ச்சியடைகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil